Aran Sei

லக்னோ: காசி விஸ்வநாதர் கோவில் குறித்து தலித் பேராசிரியர் கருத்து – ஜெய்ஸ்ரீராம் முழக்கமிட்டு ஏபிவிபியினர் போராட்டம்

யூடியூப் விவாதத்தில் காசி விஸ்வநாதர் கோயில்-ஞானவாபி மசூதி விவகாரம் தொடர்பாக ஹிந்திப் பேராசிரியர் ரவிகாந்த் சந்தன் தெரிவித்த கருத்துக்கு அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ABVP) உறுப்பினர்கள் இன்று (மே-10) லக்னோ பல்கலைக்கழகத்தில் போராட்டம் நடத்தியுள்ளனர்.

பேராசிரியர் ரவிகாந்த் சந்தன் லக்னோ பல்கலைக்கழகத்தின் இந்தி துறையில் இணைப் பேராசிரியராக உள்ளார். ஒரு யூடியூப் விவாதத்தில் பேசும்போது இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் பட்டாபி சீதாராமையாவின் புத்தகத்தை மேற்கோள் காட்டி பேசியுள்ளார். அதில், வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலை முகலாய ஆட்சியாளர் ஔரங்கசீப் இடித்தார். காரணம் என்னவென்றால், காசி விஸ்வநாதர் கோயிலின் கருவறையில் பெண் ஒருவர் வண்புணர்வு செய்யப்பட்டதை கண்டதால் அவர்(ஔரங்கசீப்) அக்கோயிலை இடித்தார் என்று அப்புத்தகத்தில் எழுதியுள்ளதை அவர் குறிப்பிட்டிருந்தார்.

குதுப் மினாருக்கு வெளியே அனுமன் சாலிசா பாடிய இந்துத்துவாவினர் – விஷ்ணு ஸ்தம்ப் என்று பெயரை மாற்ற கோரி போராட்டம்

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஏபிவிபியினர், கல்வி நிலைய வளாகத்தில் ‘ஜெய் ஸ்ரீராம்’ கோஷங்களை எழுப்பியதுடன்  பேராசிரியரை பதவியில் இருந்து நீக்கக் கோரி போராட்டம் நடத்தியுள்ளனர்.

“அவருக்கு  ஒரு கம்யூனிஸ்ட் மனப்பான்மை இருக்கிறது. இது ஒரு நோய். இந்து மரபுகளைப் விமர்சிக்க அவர் இதைப் பயன்படுத்திக்கொண்டார். காசி விஸ்வநாதர் கோவில் பற்றி அவர் கருத்து என்பது சமூகத்தைப் பிரிக்கும் முயற்சி” என்று லக்னோ பல்கலைக்கழகத்தில் நடந்த போராட்டத்தின் போது ஏபிவிபியை சேர்ந்த மாணவர் தலைவர் ஒருவர் பேசியுள்ளார்.

லக்னோ காவல்துறையும் பல்கலைக்கழக நிர்வாகமும் இப்பிரச்சினையில் தலையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்களையும் பேராசிரியரையும் சமாதானப் படுத்தினர். பின்னர், ஏபிவிபி மாணவர்களிடையே அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

இளையராஜா விவகாரம் – ஈவிகேஎஸ். இளங்கோவன், கீ.வீரமணி மீது வழக்குப் பதிய தேசிய எஸ்.சி/எஸ்.டி ஆணையம் உத்தரவு

இதற்கிடையில், அறிக்கை வெளியிட்டுள்ள பேராசிரியர் ரவிகாந்த், தனது பேச்சால் யாரேனும் புண்பட்டிருந்தால் மன்னிப்பு கேட்க விரும்புவதாக கூறியுள்ளார்.

“வாரணாசியில் மசூதி எப்படி கட்டப்பட்டது என்பது பற்றிய ஒரு புத்தகத்தில் இருந்து ஒரு கதையை மேற்கோள் காட்டி நான் பேசினேன். இந்துமத உணர்வுகளை புண்படுத்துவதற்காக நான் பேசவில்லை. எனக்கு அப்படி எந்த எண்ணமும் இல்லை. நான் மன்னிப்பு கோரிய பிறகும் என்னைக் குறி வைக்கிறார்கள். நான் ஒரு தலித் என்பதால் ஏபிவிபியினர் எனது குரலை நசுக்குகிறார்கள்”  என்று பேராசிரியர் ரவிகாந்த் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இச்சம்பவத்திற்கு,  இடதுசாரி அமைப்பான அனைத்திந்திய மாணவர் சங்கம் (ஏஐஎஸ்ஏ) ஏபிவிபியின் எதிர்ப்பைக் கண்டித்துள்ளது.

கேரளா: ஏழை இந்துவின் அறுவை சிகிச்சைக்கு நிதி திரட்டிய இஸ்லாமியர்கள்

பல்கலைக்கழக வளாகத்தில் வெறுக்கத்தக்க கும்பல்களால் இதுபோன்ற கோஷம் எழுப்பப்படுவது முற்றிலும் வெட்கக்கேடானது என்றும் அனைத்திந்திய மாணவர் சங்கம் தெரிவித்துள்ளது.

Source: ndtv

இலங்கையில் நடப்பது இது தான்? | Tu Senan Interview

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்