Aran Sei

ஜம்மு காஷ்மீரில் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி – துணைநிலை ஆளுநர் உத்தரவு

ம்மு காஷ்மீர் மாநிலத்தில் அன்னிய முதலீட்டிற்கு துணைநிலை ஆளுநர் வழிவகை செய்துள்ளார்.

துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா ​​தலைமையில் நிர்வாகக் கவுன்சிலின் கூட்டத்தில் ஜம்மு காஷ்மீர் தொழில் துறையில் அன்னிய முதலீட்டை மேம்படுத்துவதற்கான கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கி மற்றும் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பட்டுத் துறை வழியாக ஒன்றிய அரசு வழங்கிய அன்னிய நேரடி முதலீடு குறித்த வழிகாட்டுகளின் அடிப்படையில், இந்த புதிய கொள்கையானது அடுத்த பத்து ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் என்றும் குறைந்தபட்சம் 51 விழுக்காடு அன்னிய பங்குகளுடன் 100 கோடி ரூபாய்க்கு மேல் முதலீடுகளை ஈர்க்கப்படவுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காப்பீட்டுத் துறையில் 74 சதவீதம் அந்நிய நேரடி முதலீடு – மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியது

இந்தக் கொள்கையானது, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பல்வேறு தொழிற்பேட்டைகளில் உள்ள தகுதியான நிலங்களை, அன்னிய முதலீடுகளைக் கொண்ட தொழிற்சாலைகளுக்கு வழங்குவதை உறுதி செய்யும்.

நில ஒதுக்கீடு தொடர்பான செயல்முறைகளானது ஜம்மு காஷ்மீர் தொழில்துறை நில ஒதுக்கீடு கொள்கை, 2021-30ன் படி ஒழுங்குபடுத்தப்படும்.

Source: New Indian Express

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்