Aran Sei

கடந்த 7 ஆண்டுகளில் சமையல் எரிவாயு விலை இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது – மத்திய பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான்

டந்த 7 ஆண்டுகளில், சமையல் எரிவாயுவின் விலை இரு மடங்காகவும், பெட்ரோல், டீசல் மீதான வரி 459 விழுக்காடு அதிகரித்திருப்பதாகவும், மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்குத் திங்களன்று (மார்ச் 8) எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில், அவர் இதைக் குறிப்பிட்டுள்ளார்.

மார்ச் 1, 2014 ஆம் தேதி ரூ. 410.5 ஆக இருந்த 14.2 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டரின் சில்லறை விற்பனை விலை, இந்த மாதம் ரூ. 819 ஆக உயர்ந்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஹரியானா பாஜக அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – ஆதரிக்கும்படி வலியுறுத்தும் விவசாயிகள்

கடந்த சில மாதங்களாக சிறு சிறு அளவில் உயர்ந்து வரும் விலை, சமையல் எரிவாயு பொது விநியோக திட்டத்தில் விற்கப்படும் மண்ணெண்ணெய் ஆகியவற்றிக்கு வழங்கப்பட்டு வந்த மானியம் நிறுத்தப்பட்டுள்ளது.

”கடந்த சில மாதங்களாக வீட்டு உபயோகத்திற்கான  மானிய சமையல் எரிவாயுவின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. டிசம்பர் மாதம் ரூ. 594 ஆக இருந்த ஒரு சிலிண்டரின் விலை, இப்போது ரூ.819 ஆக உயர்ந்திருக்கிறது.  இதேபோல், பொது விநியோக முறை (PDS) மூலம் ஏழை மக்களுக்கு விற்கப்படும் மண்ணெண்ணெய் விலை 2014 ஆம் ஆண்டு மார்ச்  லிட்டருக்கு 14.96 ரூபாயாக இருந்த நிலையில், இந்த மாதம் 35.35 ஆக உயர்ந்துள்ளது.” என பிரதான் கூறியுள்ளார்.

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை இதுவரை இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது. மாநிலங்களின் மதிப்பு கூட்டு வரி (வாட் வரி) பொறுத்து மாநிலத்திற்கு மாநிலம் விலை வேறுபடுகிறது. தற்போது தலைநகர் டெல்லி  பெட்ரோலின் விலை லிட்டருக்கு ரூ. 91.17 ஆகவும், டீசலின் விலை லிட்டருக்கு ரூ. 81.47 ஆகவும் இருப்பதாக அந்தப் பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதி குறித்து கேரளாவிற்கு பாடம் எடுக்காதீர்கள் அமித்ஷா – பினராயி விஜயன் பதிலடி

பெட்ரோல், டீசல் மீதான வரி 2013 ஆம் ஆண்டில் ரூ 52,537 கோடியாக இருந்த நிலையில், அது 2019-20 நிதியாண்டில் அது 2.13 லட்சம் கோடியாகவும், இந்த நிதியாண்டின் முதல் 11 மாதங்களில் அது 2.94 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளதாகவும் தர்மேந்திர பிரதான் தனது பதிலில் தெரிவித்துள்ளார்.

தற்போது இருக்கும் பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ. 32.90 ஆகவும், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ. 31.80 ஆகவும் இருக்கிறது. இதே கலால் வரி பெட்ரோல் மீது லிட்டருக்கு ரூ. 17.98 ஆகவும், டீசல் மீது லிட்டருக்கு ரூ 13.83 ஆகவும் இருந்துள்ளது என பிரதான் கூறியுள்ளார்.

மத்திய அரசின் மொத்த கலால் வரி வசூல் 2016-17 ஆம் நிதியாண்டில், ரூ. 2.37 லட்சம் கோடியாக இருந்த நிலையில், 2020 -21 ஆம் நிதியாண்டில் ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான ரூ. 3.01 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது என மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதிலில் தெரிவித்துள்ளார்.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்