மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ், சிவசேனா உள்ளிட்ட கட்சிகளின் தலையிலான ஆட்சி கவிழ்ந்துள்ளது. பின்னர் பாஜக தலைமையில் புதிய ஆட்சி பொறுப்பேற்றுள்ள நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சர்த் பவாருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஒன்றிய அரசு தனக்கு காதல் கடிதம் அனுப்பியுள்ளதாக சரத் பவார் பகடி செய்துள்ளார்.
2004, 2009, 2014 மற்றும் 2020 தேர்தல்களின்போது தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரங்கள் தொடர்பானது தான் இந்த காதல் கடிதம் என்றும், தகவல் கொடுப்பதில் கவலை இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
‘நாங்கள் இந்துக்கள் அல்ல’ – ஜார்கண்ட், ஒடிசா, அசாம் உள்ளிட்ட பழங்குடி மக்கள் போராட்டம்
தேசியவாத காங்கிரஸ் கட்சி, காங்கிரஸ், சிவசேனா உள்ளிட்ட கட்சிகள் இணைந்த மகா விகாஸ் அகாடி மகாராஷ்டிராவில் ஆட்சி அமைத்து வந்தது. சிவசேனாவைச் சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே தலைமையில் ஆட்சிக்கு எதிராக சட்டமன்ற உறுப்பினர்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டார்கள். பின்னர் உத்தவ் தாக்கரே அரசாங்கத்தை கவிழ்த்துவிட்டு பாஜகவின் ஆதரவில் ஷிண்டே முதலமைச்சராக பதவியேற்றுள்ளார். ஷிண்டே முதலமைச்சரான உடன் தனக்கு ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது என்று சரத் பவார் குறிப்பிட்டுள்ளார்.
“2004, 2009, 2014 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் தாக்கல் செய்யப்பட்ட தேர்தல் பிரமாணப் பத்திரங்கள் தொடர்பாக வருமான வரித்துறையிலிருந்து எனக்கு ஒரு காதல் கடிதம் வந்துள்ளது” என்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு தன்னுடைய நிறுவனங்களை பயன்படுத்தி “குறிப்பிட்ட நபர்களின் தகவல்களைச் சேகரித்து வருகிறது” என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.
“இந்தத் துறையின் செயல்திறன் அதிகரித்துள்ளது. பல ஆண்டுகளாக தகவல்களை சேகரிப்பதில் கவனம் செலுத்துவதும், குறிப்பிட்ட நபர்களிடமிருந்து தகவல்களை சேகரிப்பதும் ஒரு முதன்மையான திட்டமாக தெரிகிறது” என்று சரத் பவார் தெரிவித்துள்ளார்.
Source: ndtv
தமிழ்நாட்டுல பாஜக செல்வாக்கு இவ்வளவு தான்! ADMK Issue | Annamalai
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.