Aran Sei

இந்து சிறுமியுடன் நடந்து சென்ற இஸ்லாமிய சிறுவன் கைது – லவ் ஜிகாத் என குற்றச்சாட்டு

த்தர பிரதேச மாநிலத்தில் சட்டவிரோத மதமாற்ற தடுப்புச் சட்டத்தில் 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளதாக தி வயர் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த டிசம்பர் 14-ம் தேதி இரவு 10 மணியளவில். உத்தர பிரதேசத்தின் பிஜ்னோர் மாவட்டத்தில். நண்பனின் பிறந்த நாள் விழாவில் கலந்துக் கொண்டு ஒன்றாக வீடு திரும்பிக் கொண்டிருந்த பதின்ம வயது இஸ்லாமிய சிறுவனும் (17 வயது) இந்து சிறுமியும் (16 வயது) வலதுசாரி குழு ஒன்றால் விசாரிக்கப்பட்டுள்ளனர். வெவ்வேறு மதத்தினர் என்பது தெரிந்த பின்பு, வலதுசாரி கும்பல் அவர்களை கடுமையாக தாக்கி, அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றதாகவும் தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்து சிறுமியின் தந்தை, இஸ்லாமிய சிறுவன், தன் பெண்ணை திருமணம் செய்து மதமாற்றம் செய்ய திட்டமிட்டிருப்பதாக காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில், கடந்த டிசம்பர் 15-ம் கைது செய்யப்பட்ட இஸ்லாமிய சிறுவன் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது என தி வயர் இணையதளம் குறிப்பிட்டுள்ளது.அந்த சிறுவன் மதமாற்றம் செய்ய முயற்சிக்கவில்லை என, அந்தப் பெண்ணின் தாயாரும் அந்தப் பெண்ணும் கூறியுள்ளனர் என என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.

உபி : லவ் ஜிகாத்திற்கு எதிரான சட்டத்தின் கீழ் முதல் கைது

தலித் சமூகத்தை சேர்ந்த இந்து சிறுமியை கட்டாய மதமாற்றம் செய்ய முயன்றதாகவும் போக்சோ சட்டத்தின் கீழும் அந்த சிறுவன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து பத்திரிகையாளர்களிடம் பேசிய அந்தச் சிறுமி ”லவ் ஜிகாத்” என்ற கூற்றை முற்றும் முழுதுமாக நிராகரித்துள்ளார் என என்டிடிவி தெரிவித்துள்ளது.

இஸ்லாமிய இளைஞர்கள், இந்து பெண்களை திருமணம் செய்துகொள்வதற்கு உள்நோக்கம் கற்பிக்கும் இந்துத்துவ வலது சாரிகள் அதை ‘லவ் ஜிகாத்’ என்று அழைக்கிறார்கள்.

மதமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ் உத்தரப்பிரதேசத்தில் 7-வது வழக்கு – கூலித் தொழிலாளி கைது

”இந்து சிறுமியை சில நாட்களாக காணவில்லை, அவர் கண்டுபிடிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இஸ்லாமிய சிறுவன் சோனு என்ற போலி பெயரில் அந்தப் பெண்ணுடன் பழகி அந்தப் பெண்ணை மதம் மாற்ற வற்புறுத்தியுள்ளார். அந்தப் பெண் எப்படியோ தப்பித்துள்ளார். குற்றம் சாட்டப்பட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்” என்று பிஜ்னோரின் மூத்த காவல்துறை அதிகாரி சஞ்சய் குமார் கூறியுள்ளார்.

மதமாற்றம் செய்ததற்கான ஆதாரம் இல்லை – பஜ்ரங் தளத்தால் மிரட்டப்பட்ட இஸ்லாமிய சகோதரர்கள் சிறையிலிருந்து விடுவிப்பு

இந்த வழக்கில் சட்டவிரோத மதமாற்ற சட்டத்தைப் பயன்படுத்துவதை நியாயப்படுத்த, பிஜ்னோர் காவல்துறை, தன் ட்விட்டர் பக்கத்தில் “சிறுமியின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரது அறிக்கை மாவட்ட நீதிபதி முன்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. மற்ற ஆதாரங்களின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார்” என்று பதிவிட்டுள்ளனர்.

லவ் ஜிகாத் வதந்தி – காவல்துறையால் சித்திரவதை செய்யப்பட்ட இஸ்லாமியத் தம்பதியர்

இது குறித்து என்டிடிவி யிடம் பேசிய கிராம தலைவர் வினோத் சைனி “காவல்துறையினர் வழக்கை திட்டமிட்டு புனைந்துள்ளதாகவே தெரிகிறது. லவ் ஜிகாத்திற்கும் இதற்கும் சம்பந்தபந்தமில்லை” என்று கூறியுள்ளார். இந்தச் சம்பவத்தை வைத்து அரசியல் செய்யப் பார்க்கிறார்கள் என அவர் குற்றம் சாட்டியுள்ளதாக தி வயர் குறிப்பிட்டுள்ளது.

‘லவ் ஜிகாத் வழக்கு : நிரூபிக்க ஆதாரம் இல்லை’ – அலகாபாத் உயர் நீதிமன்றம்

சிறுமியின் வீட்டிலிருந்து 3 கி.மீ தூரத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இருக்கும் கைது செய்யப்பட்ட இஸ்லாமிய இளைஞனின் தாய் “என் பையன் ஒரு பிறந்தநாள் விழாவுக்குப் போவதாகக் கூறினான். மறுநாள் காலையில் என் பையன் காவல் நிலையத்தில் இருப்பதைக் தெரிந்து கொண்டோம். அவர் சிறையில் தாக்கப்பட்டிருக்கிறார். எங்களுக்கு அவர் திரும்பி வர வேண்டும்” என்று கண்ணீருடன் கூறியதாக என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.

”2021-ம் ஆண்டின் மற்றொரு தலைப்புச் செய்தி” என இந்தச் சம்பவம் குறித்து சமூக வலைதளங்களில், இந்த கைது, விமர்சனம் செய்யப்படுகிறது.

உத்தர பிரதேசத்தில், சட்டவிரோத மதமாற்ற தடுப்புச் சட்டம் அமலுக்கு வந்தப் பிறகு, இது வரை 34 நபர்கள் இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்ய்ப்பட்டுள்ளதாகவும், 11 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்