Aran Sei

மதமாற்ற தடுப்புச் சட்டத்தை ரத்து செய் : நூறு முன்னாள் ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகள் கடிதம்

உத்தர பிரதேசத்தின் சட்டவிரோத மதமாற்ற தடுப்புச் சட்டத்தை ரத்து செய்ய கோரி 100 ஓய்வுப்பெற்ற முன்னாள் இந்திய குடியியல் பணி அதிகாரிகள் (ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஇஎஸ்) முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ”இந்துப் பெண்களை இஸ்லாமிய இளைஞர்கள் காதல் (லவ் ஜிகாத்) என்ற பெயரில் திருமணம் செய்து மதமாற்றம் செய்வதைத் தடுப்பதற்குச் சட்டம் இயற்றப்படும்” எனத் தேர்தல் பிரச்சாரத்தின் போது தெரிவித்திருந்தார்.

இஸ்லாமிய இளைஞர், இந்துப் பெண்ணைத் திருமணம் செய்துகொள்வதற்கு உள்நோக்கம் கற்பிக்கும் இந்துத்துவ வலதுசாரிகள் அதை ‘லவ் ஜிகாத்’ என்று அழைக்கிறார்கள்.

‘எனது வாழ்க்கையை அரசு பாழாக்கி விட்டது’ – மதமாற்ற தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட இளைஞர் வேதனை

அதன்படி, மதமாற்றத்தைத் தடுப்பதற்காக மாநில சட்ட கமிஷன் புதிய மசோதாவைத் தயாரித்து அரசுக்குச் சமர்ப்பித்தது. இதனடிப்படையில் கட்டாய மதமாற்றத்தைத் தடுக்கும் அவசரச் சட்டத்திற்கு அம்மாநில அமைச்சரவையின் ஒப்புதல் அளிக்கப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டது.

இதையடுத்து திருமணத்திற்காகவோ அல்லது பலவந்தமாகவோ மதமாற்றம் செய்தால் 10 ஆண்டுகளுக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என உத்தர பிரதேச அமைச்சரவை இயற்றிய சட்டத்திற்கு அம்மாநில ஆளுநர் ஆனந்தி பென் படேல் (27/11/20) ஒப்புதல் அளித்தார்.

மதமாற்றம் செய்ததற்கான ஆதாரம் இல்லை – பஜ்ரங் தளத்தால் மிரட்டப்பட்ட இஸ்லாமிய சகோதரர்கள் சிறையிலிருந்து விடுவிப்பு

இந்தச் சட்டம் அமலுக்கு வந்த நாளில் இருந்தே பல்வேறு நபர்கள் சட்டவிரோத மதமாற்ற தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

இந்து சிறுமியுடன் நடந்து சென்ற இஸ்லாமிய சிறுவன் கைது – லவ் ஜிகாத் என குற்றச்சாட்டு

அவர்கள் அனுப்பியுள்ள கடிதத்தில் உத்தர பிரதேச மாநிலம் மொரதாபாத்தில், திருமணம் முடிந்து ஐந்து மாதங்கள் கழித்து திருமணத்தைப் பதிவு செய்வதற்காகப் பதிவாளர் அலுவலகம் சென்ற தம்பதியை (ரஷித் மற்றும் பிங்கி) தடுத்த பஜ்ரங் தளத்தின் நிர்வாகிகள், அவர்களைக் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டனர். உத்தர பிரதேசத்தின் சட்டவிரோத மதமாற்ற தடுப்புச் சட்டம் பிரிவு 3-ன் கீழ் ரஷித் மீதும் அவரது சகோதரர் மீதும் வழக்கு பதியப்பட்டு அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். ரஷித்தின் மனைவி பிங்கி, உத்தரப் பிரதேச காவல்துறையால் அரசு காப்பகமான நாரி நிகேதனில் தங்க வைக்கப்பட்ட இந்த சம்பவத்தை அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கணவனிடமிருந்து பிரிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண் – காப்பகத்தில் இருந்து விடுதலை

இந்தச் சட்டம் மத சுதந்திரத்திற்கு எதிரான தாக்குதல் என்றும் உத்தரபிரதேசத்தை ஒரு சர்வாதிகார ஆட்சியின் நிலைக்கு உயர்த்துவதாகவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மதமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ் உத்தரப்பிரதேசத்தில் 7-வது வழக்கு – கூலித் தொழிலாளி கைது

அலகாபாத் உயர்நீதிமன்றம் உட்பட பல உயர்நீதிமன்றங்களும் ஒருமனதாக வாழ்க்கை துணையை தேர்ந்தெடுப்பது என்பது அடிப்படை உரிமை என்பதை வலியுறுத்திய பின்பும் இது போன்ற சட்டம் அமலில் இருப்பது அரசியலமைப்புக்கு எதிரானது என கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.

லவ் ஜிகாத் வதந்தி – காவல்துறையால் சித்திரவதை செய்யப்பட்ட இஸ்லாமியத் தம்பதியர்

 

எனவே, அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக இருக்கும் இந்தச் சட்டத்தை ரத்து செய்யும்படி 100 ஓய்வுப்பெற்ற முன்னாள் இந்திய குடியியல் பணி அதிகாரிகள் முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்