Aran Sei

‘எனது வாழ்க்கையை அரசு பாழாக்கி விட்டது’ – மதமாற்ற தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட இளைஞர் வேதனை

credits : the hindu

ஸ்லாமியர் என்பதால் குறிவைக்கப்பட்டதாக, சட்டவிரோத மதமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ் முதல் நபராக கைது செய்யப்பட்ட ஓவைஸ் அகமது கூறியுள்ளார் என தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

இஸ்லாமிய இளைஞர், இந்துப் பெண்ணைத் திருமணம் செய்துகொள்வதற்கு உள்நோக்கம் கற்பிக்கும் இந்துத்துவ வலதுசாரிகள் அதை ‘லவ் ஜிகாத்’ என்று அழைக்கிறார்கள். இதை தடுப்பதாக கூறி உத்தர பிரதேச அரசு சட்டவிரோத மதமாற்ற தடுப்புச் சட்டத்தை கொண்டு வந்துள்ளது.

சட்டவிரோத மதமாற்ற தடுப்புச் சட்டம் அமலுக்கு வந்த 24 மணி நேரத்தில் (நவம்பர் 29-ம் தேதி), ஷரிஃப்நகரைச் சேர்ந்த டிக்காராம், தனது மகளுடன் நட்பாகப் பழகி வந்த ஓவைஸ் அகமது, திருமணம் செய்துகொள்வதாகக் கூறி தன் மகளைக் கவர்ந்து, ஏமாற்றியுள்ளார் என்றும், தற்போது மதம் மாறச் சொல்லிக் கட்டாயப்படுத்துகிறார் என்றும் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

லவ் ஜிகாத்திற்கு எதிரான சட்டத்தில் முதல் வழக்குப் பதிவு : யோகி அரசு

”நானும் என் குடும்பத்தாரும் பல முறை கூறியும் அந்தப் பையன் கேட்கவில்லை. அவனுடைய ஆசையை நிறைவேற்ற எங்களுக்குக் கொலை மிரட்டல் உட்பட பல்வேறு அழுத்தங்களைத் தருகிறார்” என ஓவைஸ் அகமது மீது அவர் குற்றம் சுமத்தினார்.
இதைத்தொடர்ந்து, உத்தரப் பிரதேச சட்டவிரோத மதமாற்ற தடுப்புச் சட்டத்தின் (2020) கீழ், பரேலி காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. மேலும் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 504 (அமைதிக்குக் குந்தகம் விளைவிப்பது) மற்றும் 506 ( குற்றங்கருதி மிரட்டுவது) -ன் கீழும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து கட்டாய மதமாற்றம் செய்ய வற்புறுத்தியதாக ஓவைஸ் அகமத் காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.

மதமாற்றம் செய்ததற்கான ஆதாரம் இல்லை – பஜ்ரங் தளத்தால் மிரட்டப்பட்ட இஸ்லாமிய சகோதரர்கள் சிறையிலிருந்து விடுவிப்பு

இந்நிலையில், மூன்று மாத சிறைவாசத்துக்குப் பிறகு பிணையில் வெளிவந்துள்ள ஓவைஸ் அகமது, தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் முகாந்திரம் இல்லாதவை மற்றும் ஆதாரமற்றவை என்று கூறியுள்ளார்.

இந்து சிறுமியுடன் நடந்து சென்ற இஸ்லாமிய சிறுவன் கைது – லவ் ஜிகாத் என குற்றச்சாட்டு

இந்தச் சட்டம் அமலுக்கு வந்த 24 மணி நேரத்திற்குள் கைது செய்ய வேண்டும் என்ற காவல்துறையின் ஆர்வத்தினால், தான் கைது செய்யப்பட்டதாக தி இந்து – விடம் அவர் தெரிவித்துள்ளார்.

பெண்ணினுடைய தந்தை டிகாராமினுடைய குற்றச்சாட்டு முழுவதையும் அவர் மறுத்துள்ளார். ”என் மீது தற்போது காவல்துறையில் வழக்கு உள்ளது. நான் அரசு வேலையில் சேர விரும்பினேன். ராணுவத்தில் சேருவதற்கும் தயாராகிக் கொண்டிருந்தேன். அதுதான் எனது முதன்மையான குறிக்கோள். எனது வாழ்க்கையும் நற்பெயரும் பாழாகிவிட்டது.” என்று ஓவைஸ் அகமது கூறியாதாக தி இந்து செய்தி வெளிவியிட்டுள்ளது.

”நான் இஸ்லாமியர் என்பதனால் அரசு என்னை தவறாக சித்தரிக்க முயல்கிறது. இஸ்லாமிய பெண் இந்து ஆணை திருமணம் செய்ததாக ஏன் இன்னும் ஒருவர் மீது கூட வழக்குப் பதிவு செய்யப்படல்லை” என அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

கணவனிடமிருந்து பிரிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண் – காப்பகத்தில் இருந்து விடுதலை

கொலை மிரட்டல் விடுத்ததாக பெண்ணின் தந்தை அளித்த குற்றச்சாட்டுக்கு ”நான் தொடர்ந்து அவர்களை அச்சுறுத்துகிறேன் என்பதற்கு அவர்களிடம் ஆதாரம் உள்ளதா? நான் அவர்களை அச்சுறுத்தியிருந்தால் அல்லது துன்புறுத்தியிருந்தால், அக்கம்பக்கத்தினரும் அதைக் கேட்டிருப்பார்கள். இதை யாராவது கேட்டார்களா? பொதுவாக, ஒரு சிறிய சண்டை நடந்தாலும் முழு கிராமமும் தெரிந்து கொள்ளும்” என்று ஓவைஸ் அகமது கூறியுள்ளார் என தி இந்து பதிவிட்டுள்ளது.

லவ் ஜிகாத் வதந்தி – காவல்துறையால் சித்திரவதை செய்யப்பட்ட இஸ்லாமியத் தம்பதியர்

சட்டவிரோத மதமாற்ற தடுப்புச் சட்டம் அமலுக்கு வந்தப் பிறகு, இது வரை 34 நபர்கள் இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 11 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் தி இந்து செய்தி கூறுகிறது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்