Aran Sei

மதமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ் உத்தரப்பிரதேசத்தில் 7-வது வழக்கு – கூலித் தொழிலாளி கைது

credits : indian express

ஸ்லாமிய இளைஞர், இந்துப் பெண்ணைத் திருமணம் செய்துகொள்வதற்கு உள்நோக்கம் கற்பிக்கும் இந்துத்துவ வலதுசாரிகள் அதை ‘லவ் ஜிகாத்’ என்று அழைக்கிறார்கள்.

திருமணத்திற்காகவோ அல்லது பலவந்தமாகவோ மதமாற்றம் செய்தால் லவ் ஜிகாத் என்ற பெயரில் 10 ஆண்டுகளுக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என உத்தரப்பிரதேச அமைச்சரவை இயற்றிய சட்டத்திற்குக் கடந்த மாதம் 27 ஆம் தேதி, அம்மாநில ஆளுநர் ஆனந்தி பென் படேல் ஒப்புதல் அளித்தார். இதையடுத்து அந்தச் சட்டம் அமலுக்கு வந்தது.

லவ் ஜிகாத் வதந்தி – காவல்துறையால் சித்திரவதை செய்யப்பட்ட இஸ்லாமியத் தம்பதியர்

உத்தரப்பிரதேசச் சட்டவிரோத மதமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் நபருக்குப் பிணை கிடையாது. மதமாற்றம் செய்யத் திட்டமிட்டுப் போலியாகத் திருமணம் செய்வது, கட்டாயப்படுத்தி, வற்புறுத்தி அவர்கள் மீது அதிகாரம் செலுத்தி மதமாற்றம் செய்பவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

இந்தச் சட்டத்தின் விதிமுறைகளை மீறுபவர்களுக்கு ரூ.15,000 அபராதத்துடன் ஒரு வருடம் முதல் ஐந்து வருடங்கள் வரை கடுங்காவல் தண்டனை வழங்கப்படும்.

உத்தர பிரதேசம் : இந்து முஸ்லிம் திருமணத்தைப் பதிவு செய்ய விடாமல் தடுத்த பஜ்ரங் தளம்

இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்னோரைச் சேர்ந்த 22 வயதான அஃப்சல், கோட்வாலி பகுதியைச் சேர்ந்த பெண்ணைக் கடத்தியதாக மதமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார் என தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. கடத்தப்பட்டுள்ள பெண்ணை மீட்டு மருத்துவப் பரிசோதனை செய்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த நவம்பர் 29-ம் தேதி முதல் அமலுக்கு வந்த சட்டவிரோத மதமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும் ஏழாவது வழக்கு அஃப்சல் மீது என்பது குறிப்பிடத்தக்கது. சட்டவிரோத மதமாற்ற தடுப்புச் சட்டம் மற்றும் கடத்தல் ஆகிய பிரிவுகளில் அஃப்சல் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

பெற்றோர் அனுமதியுடன் இந்து முஸ்லிம் திருமணம் – தடுத்து நிறுத்தியது உபி காவல்துறை

”நாங்கள் கூலித் தொழிலாளியான அப்சலைக் கைது செய்து பிஜ்னோரில் உள்ள உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளோம். நீதிமன்றம் அவரைக் காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது. அந்தப் பெண் மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு அவர் அத்தையுடன் தங்க வைக்கப்பட்டுள்ளார். நீதிபதி அந்தப் பெண்ணின் வாக்குமூலத்தை இன்னும் கேட்கவில்லை” என்று கோட்வாலியின் காவல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

உபி : லவ் ஜிகாத்திற்கு எதிரான சட்டத்தின் கீழ் முதல் கைது

கடந்த டிசம்பர் 8-ம் தேதி பெண்ணின் தந்தை தனது மகளைக் கடத்தியதாக அப்சல் மீது காவல்துறையில் புகார் அளித்துள்ளார். புகாரளித்த இரண்டு நாட்களுக்குப் பிறகு, பிஜ்னோரில் பெண்ணைக் காவல்துறையினர் மீட்டுள்ளனர். அஃப்சல் கடந்த வெள்ளிக்கிழமையன்று கைது செய்யப்பட்டார். பெண்ணிடமிருந்து எந்த வாக்குமூலமும் பெறப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்