Aran Sei

மத மாற்ற தடைச் சட்டம் ‘வெறுப்பை’ பரப்புகிறது – பாஜக மீது ஐக்கிய ஜனதா தளம் குற்றச்சாட்டு

credits : the indian express

ட்டவிரோத மதமாற்ற தடுப்புச் சட்டம். சமூகத்தில் வெறுப்பை பரப்புவதாக ஐக்கிய ஜனதா தளத்தின் மூத்த தலைவர் கே.சி.தியாகி குற்றஞ்சாட்டியுள்ளார்.

பீகாரில், ஐக்கிய ஜனதா தளத்தின் இரண்டு நாள் தேசிய கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளரகளைச் சந்தித்த அந்த கட்சியின் மூத்த தலைவர் கே.சி.தியாகி ”நமது அரசியலமைப்புச் சட்டத்தின் படி, வயது வந்த இரண்டு நபர்கள், சாதி மதங்களுக்கு அப்பாற்பட்டு தங்களின் வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். ஆனால் இங்கு ‘லவ் ஜிகாத்’ எனும் பெயரில் சமூகத்தில் அவநம்பிக்கையும் வெறுப்பும் பரப்பபடுகிறது” என்று தெரிவித்துள்ளார்.

ஊழல் புகாருக்கு ஆளானவர் எதிர்கட்சித் தலைவரா? – தேஜஸ்விக்கு ஐக்கிய ஜனதா தளம் எதிர்ப்பு

சோஷியலிஸ்ட் தலைவரான, டாக்டர்.ராம் மனோகர் லோகியா காலத்திலேயே, வயது வந்த நபர்கள் சாதி, மத வேறுபாடின்றி திருமணம் செய்து கொள்ளும் உரிமையை சோஷியலிஸ்டுகள் உறுதி செய்ததாக கே.சி.தியாகி தெரிவித்துள்ளார்.

கட்சி தாவும் ஜனதா தள எம்எல்ஏ கள் – அருணாச்சல பிரதேசத்தில் பலமாகும் பாஜக

சமீபத்தில் அருணாச்சல பிரதேசத்தில்,  ஆறு  சட்டமன்ற உறுப்பினர்கள், ஐக்கிய ஜனதா தளத்தில் இருந்து விலகி அம்மாநிலத்தை ஆளும் கட்சியான பாஜகவில் இணைந்துள்ளனர். இதனால் 60 உறுப்பினர்கள் கொண்ட அருணாச்சல பிரதேசத்தின் சட்டசபையில் பாரதிய ஜனதாவுக்கு 48 உறுப்பினர்கள் கிடைத்துள்ளனர்.

விவசாய சட்டங்கள், பீகார் தேர்தல், வங்காள தேர்தல் பற்றி – திபாங்கர் பட்டாச்சாரியா நேர்காணல்

இது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த கே.சி.தியாகி, ”இது, பாஜகவின் கூட்டணி விரோத போக்கு. இந்த செயல்பாடு கூட்டணி தர்மத்தின் ஆன்மாவிற்கு எதிரானது” என்று தெரிவித்துள்ளார்.

பீகார்: மூன்றே நாளில் பதவி விலகிய கல்வி அமைச்சர்

மேலும், ஐக்கிய ஜனதா தளம், மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலில் போட்டியிட இருப்பதாக கூறியுள்ள அவர், சமீபத்தில் நடந்து முடிந்த பீகார் சட்டமன்ற தேர்தலில், ஐக்கிய ஜனதா தளத்தின் பின்னடைவுக்கான காரணம் குறித்து ஆராய இருப்பதாகவும் கூறியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்