ஜனவரி 14 ஆம் தேதி மாலை மத்தியப் பிரதேசத்தில் உள்ள உஜ்ஜைனி ரயில் நிலையத்தில், அஜ்மீர் செல்லும் ரயிலில் இருந்து ஆசிப் ஷேக் என்ற இஸ்லாமிய ஆணையும், அவரது சக தோழியான சாக்ஷி ஜெயின் என்ற இந்து பெண்ணையும் விஷ்வ ஹிந்து பரிஷத் ஆட்கள் இழுத்துச் சென்று, ‘லவ் ஜிஹாத்’ என்று குற்றம் சாட்டினர்.
விஎச்பி கட்சியினர் அவர்களை வலுக்கட்டாயமாக உஜ்ஜைனி ரயில்வே காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றதாகச் சொல்லப்படுகிறது. இந்த 2 பயணிகளும் உஜ்ஜைனிருந்து 65 கிமீ தொலைவில் உள்ள இந்தூரில் உள்ள இருவரின் பெற்றோர்களும் வரும் வரை உஜ்ஜைனி காவல் நிலையத்தில் காத்திருக்க வைக்கப்பட்டனர்.
இந்த இருவரின் வாக்குமூலத்தைப் பதிவு செய்து, அவர்கள் குடும்ப நண்பர்கள் என்பதைக் கண்டறிந்த காவல்துறை அவர்களை விடுவித்தனர். இந்நிலையில் இந்த 2 பயணிகளும் விஎச்பி ஆட்கள் மீது எந்த புகாரும் கொடுக்கவில்லை.
मुस्लिम लड़का और गैर मुस्लिम लड़की MP उज्जैन से ट्रेन में जा रहे थे, हिंदू संगठन वालों को खबर लगी तो वहाँ पहुँचकर लड़के को पीटते हुए थाने ले गए, जाँच के बाद पुलिस ने बताया कि लड़का और लड़की दोनों शादीशुदा हैं, दोनों में पारिवारिक संबंध भी है, जिसके बाद पुलिस ने उन्हें जाने दिया… pic.twitter.com/Q6u0md3pMC
— Ashraf Hussain (@AshrafFem) January 18, 2022
நேற்று (ஜனவரி 18) இந்த சம்பவத்தின் காணொளியை ஒரு வலதுசாரி அமைப்பு மோசமான தலைப்புடன் ட்வீட் செய்த பிறகுதான் இந்த நிகழ்வு வெளிச்சத்திற்கு வந்தது.
சமூக ஊடகங்களில் வைரலான இந்த காணொளியில், அஜ்மீர் செல்லும் ரயிலின் ஏசி கோச்சில் இருந்து காவல் நிலையத்திற்குச் செல்லும் வழியில் ஆசிப் ஷேக்கை இழுத்துச் செல்லும்போது 3 விஎச்பி ஆட்கள் ஷேக்கை தாக்குகின்றனர்.
பட்டினிச்சாவு குறித்து தவறான தகவல் அளித்த ஒன்றிய அரசு – அறிக்கை தயார் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு
சாக்ஷி ஜெயின் என்ற அந்த பெண் தன்னை படம் எடுப்பதை நிறுத்துமாறு காவல் நிலையத்திற்குள் இருக்கும் விஎச்பி ஆட்களிடம் கேட்கிறார். “உங்களுடைய தவறான புரிதலால் என் வாழ்க்கையே பாதிக்கப்படும், என்னைப் படம் பிடிக்கிறீர்கள். நான் வயது வந்த பெண், நான் என்ன செய்கிறேன் என்று எனக்குத் தெரியும், நான் ஒரு ஆசிரியர் என அந்த காணொளியில் விஎச்பி ஆட்களிடம் கேட்கும் இன்னொரு காணொளியும் பகிரப்பட்டது.
Source : The Wire
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.