Aran Sei

சட்டவிரோத மதமாற்ற தடைச் சட்டத்தில் சிறுவன் கைது – உத்தர பிரதேசத்தில் மீண்டும் சிறுவன் கைது

credits : the hindu

உத்தர பிரேதசத்தின் சட்டவிரோத மதமாற்ற தடுப்புச் சட்டத்தில், பேரலி மாவட்டத்தைச் சேர்ந்த சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளதாக, தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், “இந்துப் பெண்களைப் பாதுகாக்க, லவ் ஜிகாத்துக்கு எதிராகச் சட்டம் இயற்றப்படும்.” என்று தேர்தல் பிரச்சாரத்தின் போது கூறியிருந்தார். இதுதொடர்பாக அவசரச் சட்டத்தை உருவாக்க அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டிருந்தார்.

இஸ்லாமிய இளைஞர்கள், இந்துப் பெண்களை திருமணம் செய்துகொள்வதற்கு உள்நோக்கம் கற்பிக்கும் இந்துத்துவ வலது சாரிகள், அதை ‘லவ் ஜிகாத்’ என்று அழைக்கிறார்கள்.

இந்து சிறுமியுடன் நடந்து சென்ற இஸ்லாமிய சிறுவன் கைது – லவ் ஜிகாத் என குற்றச்சாட்டு

அறிவித்தபடி, யோகி ஆதித்யநாத் அரசு கடந்து ஆண்டு நவம்பர் மாதம், கட்டாய மத மாற்ற தடுப்புச் சட்டத்தை நிறைவேற்றியது.

இந்தச் சட்டத்தின் படி, மதம் மாறி திருமணம் செய்துகொள்ள விரும்புவோர், சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டரிடம் 60 நாட்களுக்கு முன்பே தகவல் அளிக்க வேண்டும். அதைத் தொடர்ந்து, அவரின் அனுமதி கிடைத்த பிறகே திருமணம் செய்துகொள்ளலாம்.

எத்தனை முறை சொல்வது – “திருமணத்தில் தலையிடும் உரிமை யாருக்கும் இல்லை” – அலகாபாத் உயர் நீதிமன்றம் கண்டனம்

அதை மீறி திருமணம் செய்துகொள்பவர்களுக்கு, ஆறு மாதங்கள் முதல் 10 ஆண்டுகள் வரை தண்டனை வழங்கப்படும் என்றும், 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் அதுபோன்று நடத்தப்படும் திருமணம் சட்டப்படி செல்லாது என்றும் சட்டம் கூறுகிறது.

மதமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ் உத்தரப்பிரதேசத்தில் 7-வது வழக்கு – கூலித் தொழிலாளி கைது

இந்நிலையில், நேற்று (பிப்ரவரி 10) உத்தர பிரேதசத்தின் பேரலி மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன், சட்டவிரோத மதமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

உபி மதமாற்ற சட்டத்தின் கீழ் கைது – கருச்சிதைவு ஏற்பட்டதாக பெண் குற்றச்சாட்டு

கடந்த பிப்ரவரி 6 ஆம் தேதி, நவாப்கஞ்ச் என்பவர், ஒன்பதாம் வகுப்பு படிக்கும் தன் மகளை காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகாரளித்தாகவும், அந்த புகாரில், காணாமல் போன தன் மகளின் சைக்கிள், ஒரு சிறுவன் வீட்டின் எதிரே நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாக அவர் தெரிவித்துள்ளதாகவும், தி இந்து கூறுகிறது.

மதமாற்றம் செய்ததற்கான ஆதாரம் இல்லை – பஜ்ரங் தளத்தால் மிரட்டப்பட்ட இஸ்லாமிய சகோதரர்கள் சிறையிலிருந்து விடுவிப்பு

இரண்டு நாட்களில் வீடு திரும்பிய அந்தப் பெண், ஒரு பையனுடன், தான் வெளியே சென்றதாக காவல் நிலையத்தில் வாக்குமூலம் அளித்துள்ளதாக, பேரலியின் காவல்துறை அதிகாரி தெரிவித்ததாக, அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘எனது வாழ்க்கையை அரசு பாழாக்கி விட்டது’ – மதமாற்ற தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட இளைஞர் வேதனை

இந்நிலையில், அந்த சிறுவன் மீது பாலியல் வன்புணர்வு உட்பட, இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 366, 354, 342, 376 ஆகியவற்றின் கீழ், வழக்கு பதிவு செய்யப்பட்டு செய்யப்பட்டுள்ளது என்றும், போக்சோ சட்டத்தின் கீழும், சட்டவிரோத மதமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மதமாற்ற தடுப்புச் சட்டத்தை ரத்து செய் : நூறு முன்னாள் ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகள் கடிதம்

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள் சிறுவனின் வயது 17 எனவும், பெண்ணின் வயது 15 எனவும் காவல்துறை தெரிவித்துள்ளதாகவும், உத்தர பிரதேசத்தில், சட்டவிரோத மதமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் இரண்டாவது சிறுவன் இவர் என்றும், தி இந்து கூறுகிறது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்