Aran Sei

‘லவ் ஜிகாத்’ என்ற சொல்லில் எனக்கு உடன்பாடில்லை – பாஜக கூட்டணி கட்சித் தலைவர் சவ்தாலா கருத்து

ரியானா பாஜக கூட்டணியில் உள்ள ஜனநாயக் ஜனதா கட்சியின் தலைவரும், துணை முதல்வருமான துஷ்யந்த் சௌதாலா, ‘லவ் ஜிகாத்’ என்ற சொல்லை  ஏற்று கொள்ளமாட்டேன் என்றும் அதனால் எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை என்றும் கூறியுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

விருப்பப்பப்பட்டால் யாரும், யாரையும்  திருமணம் செய்ய, எந்த மதத்திற்கு வேண்டுமானாலும்  மாறிக்கொள்ளலாம், என்றும் அவர் கூறியுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

காதலர் தினம் – பாஜகவினர் “லவ் ஜிகாத்” தாக்குதல் : ” இது டிரெய்லர்தான், அடுத்த முறை கொன்று விடுவோம்”

என்டிடிவி -க்கு சௌதாலா அளித்த பேட்டியில் “நான் ‘லவ் ஜிகாத்’ என்ற வார்த்தையை ஏற்று கொள்ளமாட்டேன். கட்டாய மதமாற்றங்களுக்கு எதிராக இங்குச் சட்டம் தேவை அதை நான் ஆதரிக்கிறேன். ஆனால். திருமணம் செய்ய விருப்பப்பட்டு மதம் மாறுவதற்கு எந்தத் தடையுமில்லை ” என்று கூறியுள்ளார்.

சௌதாலா இவ்வாறு கருத்து தெரிவித்திருக்கும் அதே சமயத்தில், பாஜக ‘லவ் ஜிகாத்’-ற்கு எதிராக சட்டம் இயற்றுவதை பற்றிச் சிந்தித்து கொண்டிருக்கிறது என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது .

லவ் ஜிகாத் வதந்தி – காவல்துறையால் சித்திரவதை செய்யப்பட்ட இஸ்லாமியத் தம்பதியர்

ஏற்கனவே வேளாண் சட்டங்களுக்கு எதிராக பாஜகவுடன் முரண்பட்டிருந்த சௌதாலா,        அவரது பதவியை ராஜினாமா செய்ய வற்புறுத்தப்பட்டார். மேலும், இந்தப் பேட்டியின் போதும் அவர், விவசாயிகளுக்குக் குறைந்த பட்ச ஆதார விலையாவது கிடைக்கும் என்ற தனது நிலைபாட்டில் உறுதி உள்ளேன் என்று கூறியுள்ளதாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாஜக ஆளும் உத்தர பிரதேசம், கர்நாடகம், மத்திய பிரதேசம்  ஆகிய மாநில சட்டமன்றங்களில் ஏற்கனவே கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம் இயற்றபட்டுள்ளது.

‘லவ் ஜிகாத் வழக்கு : நிரூபிக்க ஆதாரம் இல்லை’ – அலகாபாத் உயர் நீதிமன்றம்

தகவல் அறியும் உரிமை சட்ட செயல்பாட்டாளர் பி.பி.கபூர் பெற்ற தகவலின் அடிப்படையில், கடந்த மூன்று ஆண்டுகளில் ஹரியானாவில் மதமாற்ற திருமணங்கள் குறித்து நான்கு வழக்குகளே பதிவாகி இருப்பதாகவும், அதில் இரண்டு வழக்குகள் காவல்துறை விசாரணையிலேயே ரத்து செய்யப்பட்டதாகவும், ஒரு வழக்கு கட்டாய மதமற்றம் நடைபெறவில்லை என்பதால் முடிவுக்கு வந்ததாகவும், மற்றொரு வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்றும் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்