Aran Sei

கேரளாவில் கட்டாய மத மாற்ற தடைச் சட்டம் இயற்றப்படும் – மத்திய அமைச்சர் சதானந்த கவுடா உறுதி

கேரளாவில் பாஜக ஆட்சி அமைத்தால் கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம் இயற்றப்படும் என்று மத்திய அமைச்சர் சதானந்த கவுடா தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 6 ஆம் தேதிக்குக் கேரளா சட்டப்பேரவை நடைபெற இருக்கும் தேர்தலில், ஆளும் இடது சாரிகள் முன்னணி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி, பாஜக என மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக பாஜகவின் பல மூத்த தலைவர்களும், மத்திய அமைச்சர்களும் அந்த மாநிலத்தில் முகாமிட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மக்களவையில் உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் – பணியாற்றத் தவறியது பற்றிய ஆதாரங்கள்

இந்நிலையில் நேற்று (மார்ச் 22) ஆம் தேதி திருவனந்தபுரத்தில் மத்திய அமைச்சரும் கர்நாடக பாஜகவை சேர்ந்தவருமான சதானந்த கவுடா செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அதில், ”கேரளாவில் பாஜக ஆட்சி அமைந்தால், பாஜக ஆளும் மாநிலங்களில் இருப்பது போல கட்டாய மதமாற்ற தடைச் சட்டம் (லவ் ஜிகாத் தடை சட்டம்) அமல்படுத்தப்பட்டும். லவ் ஜிகாத்தால் கிறுஸ்துவர்கள் அதிகம் பாதிக்கின்றனர். ஆளும் இடது சாரி முன்னணி லவ் ஜிகாத்தை ஆதரிக்கிறது.” என தெரிவித்தார்.

மேலும், பாஜக ஆட்சி அமைத்தால், தேவசம் போர்டுகள் கலைக்கப்பட்டு, கோயில் நிர்வாகம் பக்தர்களிடம் ஒப்படைக்கும் என அவர் குறிப்பிட்டார்.

சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணி ஆட்சி அமைக்கும் – புதிய தலைமுறை கருத்துக் கணிப்பில் முடிவு

மார்க்சிஸ்ட் தலைமையிலான ஆட்சியில் தேசவிரோத நடவடிக்கைகளின் மையப்புள்ளியாக கேரளா உருவெடுத்துள்ளது. முதல்வர் பினராயி விஜயன் சர்வாதிகார போக்குடன் செயல்படுகிறார். அவரது ஆட்சி நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை. அடிப்படை ஜனநாயகம்கூட இல்லை. அனைத்து துறைகளிலும் மாநில அரசு தோல்வி அடைந்துள்ளது. வேளாண், தொழில் துறை நலிவடைந்துள்ளன. வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வருகிறது என அவர் குற்றம்சாட்டினார்.

அகமதாபாத் – மும்பை புல்லட் ரயில் திட்டத்திற்கு எதிர்ப்பு: நிலம் கையகப்படுத்துவதற்கு எதிராக விவசாயிகள் புகார்

அரசு இயந்திரத்தை மாநில அரசு தவறாக பயன்படுத்தி வருகிறது. ஆர்எஸ்எஸ், பாஜக தொண்டர்கள்மீது வன்முறை கட்டவிழ்த்துவிடப்படுகிறது. தாழ்த்தப்பட்டோர் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன என அவர் தெரிவித்தார்.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியில் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் தலைவர்களாக உள்ளனர். புதிய கேரளாவை உருவாக்க வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு வாக்களியுங்கள் என சதானந்த கவுடா பேசியுள்ளார்.

 

 

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்