Aran Sei

‘ராமா.. உன் பெயரில் ஊழலா?’ – அயோத்தியில் ராமர் கோவில் கட்ட நிலம் வாங்கியதில் ஊழலென காங்கிரஸ் வேதனை

யோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக அமைக்கப்பட்டுள்ள குழுவானது, கோவில் கட்டுவதற்கு நிலம் வாங்குவதில் ஊழலில் ஈடுபட்டுள்ளதாக சமாஜ்வாதி மற்றும் ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியுள்ளனர்.

மேலும் இதுகுறித்து, ஒன்றிய புலனாய்வுப் பிரிவு மற்றும் அமலாக்க இயக்குநரகம், விசாரணை நடத்த வேண்டுமெனவும் கோரியுள்ளனர்.

கடந்த மார்ச் 18 அன்று மாலை 7.10 மணியளவில், 5.8 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை, அப்பகுதியைச் சேர்ந்த இரண்டு தொழிலதிபர்கள் , 2 கோடி ரூபாய்க்கு வாங்கியதாகவும், அடுத்த 5-10 நிமிடங்களிலேயே ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா என்ற கோவில் கட்டுமானப்பணியில் ஈடுபடும் குழுவானது, அதே நிலத்தை 18.5 கோடி வாங்கியுள்ளதாகவும் சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த அயோத்தி பவன் பாண்டே மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங் ஆகியோர்  வெவ்வேறு பத்திரிகையாளர் சந்திப்புகளில் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட நிலம் வாங்கியதில் ஊழல் – ஆம் ஆத்மி, சமாஜ்வாதி கட்சியினர் குற்றச்சாட்டு

இதுதொடர்பாக, தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள பிரியங்கா காந்தி, “கோடிக்கணக்கான மக்கள் தங்கள் நம்பிக்கையினாலும் பக்தியினாலும் கடவுளின் காலடியில் தங்கள் நன்கொடைகளைச் செலுத்துகிறார்கள். அந்த நன்கொடைகளை தவறாகப் பயன்படுத்துவது அநீதியானது  மட்டுமல்ல, பாவமும் கூட. இது அவர்களின் நம்பிக்கையை அவமதிப்பதாகும்.” என்று விமர்சித்துள்ளார்.

காங்கிரஸின் தலைமை செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா தனது ட்விட்டர் பக்கத்தில்,  “ராமா, என்ன கொடுமையான நாட்கள் இது? உங்கள் பெயரில் பெறப்பட்ட நன்கொடைகளில் மோசடிகள் செய்கின்றனர். ராவணனை போன்று ஆணவ போதையில் இருக்கும் இந்த வெட்கங்கெட்ட கொள்ளையர்கள், மக்களின் நம்பிக்கையை விற்பனை செய்கிறார்கள்.” என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும், “ரூ.2 கோடிக்கு வாங்கப்பட்ட நிலம் 10 நிமிடங்களில் ராம் ஜன்மபூமிக்கு ரூ. 18.50 கோடிக்கு விற்கப்பட்டது எப்படி என்பதுதான் இப்போதைய கேள்வி.” என்று காங்கிரஸின் தலைமை செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா குறிப்பிட்டுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்