Aran Sei

எங்களைப் பார்த்துப் பாஜகவின் பி டீம் என்பதா? – ஓவைசி கண்டனம்

ங்களைப் பார்த்துப் பாஜகவின் பி டீம் என்பதா, காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் கட்சிகளின் எம்எல்ஏக்கள் என்னைக் கேட்டுதான் பாஜகவுக்கு சென்றார்களா என்று இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி ஓவைசி கேள்வி எழுப்பியுள்ளார்.

கர்நாடக மாநிலம் கல்புருகியில் சனிக்கிழமையன்று நடைபெற்ற பேரணியில் பேசிய அவர், ”ஏஐஎம்ஐஎம்முக்கு எதிராகப் பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. மேற்கு வங்க தேர்தலில் நாங்கள் போட்டியிடுவதாக அறிவித்தபின்னர், ஒரு காலத்தில் காங்கிரஸ் என்று அழைக்கப்பட்ட பேண்ட் வாத்திய கட்சி, எங்களைப் பாஜகவின் பி டீம் என்கிறார்கள். பின்னர் மம்தா பானர்ஜியும் இதே போல குற்றம் சொல்லத் தொடங்கினார். அதேபோல நானும் அவர்களைப் பற்றிப் பேச முடியும். உண்மையைச் சொல்லவேண்டுமெனில் நான் யாருக்கும் சொந்தமல்ல, மற்றவர்களைப் போலப் பொதுமக்களில் ஒருவன் அவ்வளவுதான்” என்று கூறியுள்ளார்.

நாட்டுப்பற்றுக்கு மதம் இல்லை – மோகன் பக்வத்திற்கு ஆதாரம் தருகிறோம் – ஃபைசான் முஸ்தஃபா

கர்நாடகாவில் நீங்கள் என்ன செய்தீர்கள் என்று காங்கிரஸை கேள்வி எழுப்பிய அவர், கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பெருமளவில் பாஜகவில் இணைந்துள்ளனர் என்றும் அவர்கள் தற்போது பாஜகவின் அமைச்சர்களாகவும் இருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார். ”தங்கள் கட்சி எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு செல்வதைப்பற்றியெல்லாம் மம்தாவோ காங்கிரஸும் ஏன் பேசுவதில்லை. இதைச் செய்வதற்கு முன்பு அவர்கள் என்னைக் கேட்டுக்கொண்டுதான் கட்சி மாறினார்களா” என்று ஓவைசி கேள்வி எழுப்பியுள்ளார்.

விவசாயி உயிரிழப்பு: “நான் குண்டு துளைத்த காயங்களை பார்த்தேன்” – பிரேத பரிசோதனை செய்த டாக்டர் தகவல்

“மகாத்மா காந்தி 30 ஜனவரி 1948 அன்று கொல்லப்பட்டார். சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி நாதுராம் கோட்சே. பாஜகவினர் காந்தியை நம்பவில்லை, டாக்டர் அம்பேத்கர் அல்லது சுபாஷ் சந்திரபோஸைக் கூட அவர்கள் நம்பவில்லை. அவர்கள் கோட்சேவைப் பின்பற்றுபவர்கள். ஒருபுறம், பாஜகவினர் காந்திக்கு அஞ்சலி செலுத்துகிறார்கள், மறுபுறம், அவர்கள் காந்தியின் படுகொலைக்குச் சதிகாரரான சவார்க்கரை வணங்குகிறார்கள்” என்று விமர்சித்துள்ளார்.

’விவசாய சட்டங்களால் நன்மை என்றால் பஞ்சாயத்து தேர்தலை அறிவிக்க ஏன் தாமதம் யோகிஜி’? – ஜெயந்த் சவுத்ரி கேள்வி

“மகாத்மா காந்தி படுகொலைக்குச் சாவர்க்கர் ஒரு சதிகாரர் என்று கபூர் கமிஷன் அறிக்கை கூறியதால்தான் நான் சாவர்க்கர் பெயரைக் குறிப்பிடுகிறேன். காந்தியின் படுகொலைகுறித்து அந்த நேரத்தில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசு முறையாக விசாரித்திருந்தால், ஆர்எஸ்எஸ் தலைவர் கைது செய்யப்பட்டிருப்பார். ஆனால் காங்கிரஸ் சரியாக விசாரிக்கவில்லை” என்று அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி தெரிவித்துள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்