Aran Sei

‘இந்து மதத்திற்கு அச்சுறுத்தல் நிலவுகிறது என்பது கற்பனை’- ஆர்.டி.ஐயில் கேட்கப்பட்ட கேள்விக்கு ஒன்றிய அரசு பதில்

 இந்து மதத்திற்கு அச்சுறுத்தல் நிலவுகிறது என்பது கற்பனையானது என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு ஒன்றிய அரசு பதிலளித்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் 31 அன்று நாக்பூரைச் சார்ந்த தகவல் அறியும் உரிமைச் சட்ட செயற்பாட்டாளர் மோனிஷ் ஜபல்புரே “இந்தியாவில் இந்து மதத்திற்கு அச்சுறுத்தல்கள்” நிலவுவது  குறித்த ஆவணங்களைக் கேட்டு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில், இந்த மனுவிற்கு பதிலளித்துள்ள ஒன்றிய உள்துறை அமைச்சகம், இந்து மதத்திற்கு அச்சுறுத்தல் நிலவுவது என்பது கற்பனையானது, அதுகுறித்து அரசிடம் எந்த ஆவணங்களும் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தெரிவித்துள்ள மோனிஷ் ஜபல்புரே, “முதல் முறையாக உள்துறை அமைச்சகத்தைச் சார்ந்த முக்கிய அலுவலர்  இந்து மதத்திற்கு அச்சுறுத்தல் நிலவுவது கற்பனையானது என்று தெரிவித்துள்ளார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

SOURCE: THE WIRE  

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்