Aran Sei

விவசாயிகளுக்கு ஆதரவாக லண்டனில் போராட்டம் – கைது செய்த காவல்துறை

Image Credits: Outlook India

த்திய அரசால் இயற்றப்பட்ட புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். விவசாயிகளுக்கு ஆதரவாக லண்டனில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் சிலர் தற்போது கைதாகி உள்ளனர்.

லண்டனின் மத்திய பகுதியான ஆல்ட்விச்சில் அமைந்துள்ள இந்திய தூதரகத்தின் முன்பு ‘நாங்கள் பஞ்சாப் விவசாயிகளுக்கு ஆதரவளிக்கிறோம்’ (We stand with farmers of Punjab) எனும் முழக்கத்தை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளனர். இதை ஒழுங்குபடுத்த சென்ற காவலர்கள், கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க கடுமையான விதிமுறைகள் நடைமுறையில் உள்ளன என்று தெரிவித்ததாக ‘தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது. எனவே 30 க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் அவர்கள் கைது செய்யப்படலாம் என்றும் காவல்துறையினர் கூறியுள்ளனர்.

விவசாயச் சட்டங்களுக்கு எதிர்ப்பு – லண்டனில் போராடும் இந்திய வம்சாவளிகள்

இதைத்தொடர்ந்து, கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதாக மொத்தம் 13 பேர் கைது செய்யப்பட்டதாகப் பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது. அதில் நான்கு பேரின் விவரங்களை வாங்கிக்கொண்டு காவல்துறை அவர்களை விடுத்துள்ளது. அவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள 9 பேர் இன்னும் காவலில் உள்ளனர்.

போராட்டத்தின் பொது சில இளைஞர்கள் பட்டாசுகளை கொளுத்தவிருந்தனர். அவற்றை காவலர்கள் பறிமுதல் செய்தனர்.

“நாங்கள் போராட்டத்தில் கலந்துகொள்வதற்கான முடிவை மறுபரிசீலனை செய்யக் கோரியிருந்தோம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, பலர் அந்த ஆலோசனையைப் பின்பற்ற வேண்டாம் என்று முடிவு செய்தனர். போராட்டத்தை ஒழுங்குபடுத்த காவலர்கள் தயாராக இருந்தனர். ஆர்ப்பாட்டம் இப்போது முடிவடைந்துள்ளது” என்று காவல் துறை அதிகாரி பால் ப்ரோக்டன் கூறியுள்ளார்.

“ஆல்ட்விச் பகுதிக்கு வரத் திட்டமிட்டுள்ள அனைவரையும் அவர்களுது முடிவை மறுபரிசீலனை செய்ய நான் கேட்டுக்கொள்கிறேன். தற்போது வருகை தருபவர்களுக்கு இப்பகுதியை விட்டு வெளியேற நான் கேட்டுக்கொள்கிறேன். தேவைப்பட்டால், எங்கள் அதிகாரிகள் தகுந்த நடவடிக்கையை எடுப்பார்கள்” என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்