நவம்பர் 28 ஆம் தேதியிலிருந்து, சிங்கு எல்லையில் முகாமிட்டிருக்கும் விவசாயிகளை, அந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்த ஆர்ப்பாட்டக்காரர்கள் முயன்று வருவதாக தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.
காவல்துறையின் தடுப்புகளை உடைத்ததோடு மட்டுமல்லாமல் விவசாயிகளின் கூடாரங்களைப் பிடுங்கியதால் இரு தரப்பிற்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கு எல்லையில் முகாமிட்டு இருக்கும் விவசாயிகளிடம், அந்த இடத்தைக் காலி செய்யுமாறு உள்ளூர்வாசி என்ற பெயரில் ஹிந்து சேனா அமைப்பினர் ஜனவரி 28 ஆம் தேதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் என ஊடகங்களில் செய்தி வெளியானதாக தி வயர் குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்று (ஜனவரி 29) மதியம் 1.45 மணியளவில், விவசாயிகள் மற்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் இடையே மோதல் ஏற்பட்டு கல்வீச்சு சம்பவங்களும் நடைபெற்றன என்றும், இதனால் கூட்டத்தைக் கலைக்க காவல்துறையின் தடியடி மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதாக என்டிடிவி காணொளி வெளியிட்டுள்ளது.
Tension and chaos at #SinghuBorder | Group of 300 people break barricades put up by Delhi Police, uproot farmer tents
NDTV's Arvind Gunasekar reports from ground zero pic.twitter.com/leShJx5HYU
— NDTV (@ndtv) January 29, 2021
குடியரசு தினத்தன்று நடைபெற்ற டிராக்டர் பேரணியின்போது, விவசாயிகள் இந்திய கொடியை அவமதித்து விட்டதால், அவர்கள் இந்த இடத்தைக் காலி செய்ய வேண்டும் என ஆர்பாட்டர்காரர்கள் கூறுவதாக பிடிஐ தெரிவித்துள்ளது.
டெல்லி குடிநீர் வாரியத்தின் தண்ணீர் டேங்கர்களும், மீடியா வாகனங்களும் அனுமதிக்கப்படாத சிங்கு எல்லை பகுதிக்கு, ஆயுதமேந்திய ஆர்ப்பார்ட்டக்காரர்கள் எப்படி அனுமதிக்கப்பட்டர் என என்டிடிவி ஊடகவியலாளர் அரவிந்த் குணசேகர் கேள்வி எழுப்பியிருப்பதாகத் தி வயர் கூறியுள்ளது.
விவசாய சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி போராட்டதில் ஈடுபடும் விவசாயிகள் முகாமிட்டு இருக்கும் முக்கியமான இடங்களில் சிங்கு எல்லை பகுதியும் ஒன்று என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போக்சோ சட்டத்தில் திருத்தம் கொண்டு வர இதுவே தருணம்: சென்னை உயர்நீதிமன்றம் கருத்து
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக, 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சாகீன் பாக் பகுதியில் அமைதியான வழியில் நடைபெற்ற போராட்டத்தின் மீது வன்முறையைக் கட்டவிழத்து விடுவதாக அறிவித்த ஹிந்து சேனா அமைப்பு பிறகு பின்வாங்கியதாக, தி வயர் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், திக்ரி எல்லை பகுதியில், ’சமஸ்த் தில்லி திகாத்’ என்ற அமைப்பு ”விவசாய போர்வையில் இருக்கும் ஓநாய்களை இந்தியா பொறுத்துக்கொள்ளாது” என்று எழுதப்பட்டு இருக்கும் பதாகைகளோடு, விவசாயிகளுக்கு எதிராகப் போராடி வரும் காணொளியை ஏஎன்ஐ நிறுவனம் வெளியிட்டுள்ளது.
#WATCH | Delhi: A group of people gather at Tikri border demanding that the area be vacated. pic.twitter.com/llBC6Q7g5f
— ANI (@ANI) January 29, 2021
விவசாயிகள் குடியரசு தினத்தன்று நடத்திய டிராக்டர் பேரணில் ஏற்பட்ட கலவரம் வலது சாரி அமைப்புகளால் திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்டதாக எதிர் கட்சிகள் கூறிவருவது குறிப்பிடத்தக்கது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.