Aran Sei

உள்ளாட்சி தேர்தல்: வரலாற்றில் முதன்முறையாக சென்னை மேயரானார் பட்டியல் சமூகப் பெண்

மைச்சர்கள் செங்கோல் வழங்க சென்னை மாநகராட்சியின் முதல் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த பெண் மேயராக பிரியா ராஜன் பதவியேற்றுள்ளார்.

நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த சென்னை மாநகராட்சி மேயர் பதவியை முதன்முதலாக ஒரு பெண் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். டாக்டர் அம்பேத்கரின் முயற்சியால்  தனித் தொகுதிகள் கொண்டு வரப்பட்டன. பிரதிநித்துவ சட்டத்தின் அடிப்படையில், சமூகத்தில் ஒடுக்கப்பட்ட நிலையில் இருக்கும் பட்டியல் சமூகம், பழங்குடிகள், பெண்களுக்கு சுழற்சி முறையில் பிரதிநிதித்துவம் வழங்குவது வழக்கம். அந்த வகையில் இம்முறை சென்னை மாநகராட்சிக்கு பட்டியல் சமூக பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.  இந்தப்பின்னணியில் பிரியா ராஜன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

திமுக உறுப்பினர்களை ராஜினாமா செய்ய வைத்து கூட்டணி அறத்தைக் காக்க வேண்டும் – முதல்வருக்கு திருமாவளவன் வலியுறுத்தல்

.தமிழ்நாட்டில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பெருநகர சென்னை மாநகராட்சியில் மட்டும் திமுக கூட்டணி மொத்தம் உள்ள 200 வார்டுகளில் 178 இடங்களில் வெற்றி பெற்று சென்னை மாநகராட்சியைக் கைப்பற்றியது. இதில் திமுக மட்டும் 153 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. சென்னை மாநகராட்சி மேயர் பதவி பட்டியல் வகுப்பு பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால், சென்னை மாநகராட்சியில் திமுக சார்பில் வெற்றி பெற்றுள்ள 13 பட்டியல் சமூகப் பெண்களில் ஒருவரே மேயராகும்  வாய்ப்பு இருந்தது.

சென்னை மாநகராட்சியில், 74வது வார்டில் திமுக சார்பில் வெற்றி பெற்ற பிரியா, சென்னையின் மேயர் வேட்பாளராகத் திமுக தலைமை அறிவித்துள்ளது.

பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் 19935ம் ஆண்டு திருத்தச் சட்டத்துக்கு பிறகு, சென்னை மாநகராட்சியில் மேயர் பதவியில் இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டது. அதன்படி, சென்னை மாநகராட்சியில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மேயர் பதவியை வகித்து வந்துள்ளனர்.

மென்மையான இந்துத்துவா போக்கை கடைபிடிக்கும் காங்கிரஸ் – சீதாராம் யெச்சூரி விமர்சனம்

சென்னையின் முதல் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த மேயராக ஜே.சிவசண்முகம் பிள்ளை பதவி வகித்துள்ளார். சுதந்திரத்திற்கு பிறகான, தமிழக சட்டப்பேரவையில் சபாநாயகர் பதவியையும் வகித்துள்ளார். அவருக்கு பிறகு, பட்டியல் சமூகத்தைச் சமூகத்தைச் சேர்ந்த தந்தை என்.சிவராஜ் சென்னையின் மேயர் பதவியை வகித்துள்ளார். டாக்டர் அம்பேத்கர் நிறுவிய ஷெடுயூல் கேஸ்ட் பெடரேஷன் கட்சியின் அகில இந்தியத் தலைவராக செயலாற்றியவர்.

பின்னர், ராவ்பகதூர் ரெட்டைமலை சீனிவாசனின் மகனும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான பா.பரமேசுவரன் சென்னை மேயராக பதவி வகித்துள்ளார் . திமுகவைச் சேர்ந்த குசேலர்,  வை. பாலசுந்தரம் ஆகியோர் சென்னையின் மேயர் பதவியை வகித்துள்ளனர். அம்பேத்கர் மக்கள் இயக்கம் எனும் கட்சியை வை.பாலசுந்தரம் பின்னாளில் நிறுவினார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்