சென்னை மாநகராட்சியின் 134 ஆவது வார்டான மேற்கு மாம்பலத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பாஜக வேட்பாளர் உமா ஆனந்தன் தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது மகாத்மா காந்தியைக் கொன்ற நாதுராம் கோட்சேவை புகழ்ந்து பேசி சர்ச்சையை ஏற்படுத்தியவர்.
தமிழ்நாட்டில் நடைபெற்ற நகராட்சிகளுக்கான உள்ளாட்சித் தேர்தலில் சென்னை மாநகராட்சியில் உள்ள 200 கவுன்சிலர் தொகுதிகளில் ஒன்றான மேற்கு மாம்பலத்தில் உமா ஆனந்தன் வெற்றி பெற்றுள்ளார்.
“கத்திகளையும் துப்பாக்கிகளையும் எடுப்பவர்களில் பெரும்பான்மையானவர்கள் கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்கள் என்று சொல்கிறீர்களா?” என்று தி நியூஸ் மினிட்டின் நேர்காணல் ஒன்றில் கேட்கப்பட்ட கேள்விக்கு உமா ஆனந்தன், “ஆம்” என்று பதிலளித்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலானது.
நியூட்ரினோ விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் பொய் கூறிய ஒன்றிய அரசு – பூவுலகின் நண்பர்கள்
அந்த காணொளியில், கோட்சே காந்தியைச் சுட்டுக் கொன்றது குறித்து கேள்வி கேட்டபோது, ’கோட்சே காந்தியை ஏன் சுட்டார்?’ என்று உமா ஆனந்தன் பதில் கேள்வி கேட்கிறார். மேலும் “எனக்கு இதில் எந்த வருத்தமும் இல்லை, நான் கோட்சேவின் ஆதரவாளர்” என்று உமா ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
உமா ஆனந்தன் வெற்றி பெற்ற பிறகு அவரை பற்றி வெளிவந்த மற்ற பழைய நேர்காணல்களில், அவர் சாதி அமைப்பைப் பாதுகாத்து, தலித் தலைவர்களுக்கு எதிராக இழிவான வார்த்தைகளைப் பயன்படுத்துவதையும் நம்மால் காண முடிந்தது என தி வயர் இணையதளம் தெரிவித்துள்ளது.
பசுவை பாதுகாப்பவர்களுக்கு மட்டும் வாக்களியுங்கள் – உ.பி. மக்களுக்கு யோகி ஆதித்யநாத் வேண்டுகோள்
“நான் ஒரு பிராமணன் என்பதில் பெருமை கொள்கிறேன். எனக்குச் சாதி வெறி இல்லை, ஆனால் என் பாரம்பரியத்தை நினைத்துப் பெருமைப்படுகிறேன். சாதிகள் நமது கலாச்சாரத்தின் ஒரு பகுதி. சாதி ஒழிந்தால் நமது கலாச்சாரமும் ஒழிந்து போகும். மேலும் திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் கி.வீரமணியைத் தகாத வார்த்தைகளால் திட்டிய காணொளி தி நியூஸ் மினிட் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
கோட்சேவைப் புகழ்ந்த முதல் பாஜக தலைவர் உமா ஆனந்தன் அல்ல. இதற்கு முன்னரே பாஜக நாடாளுமன்ற உறுப்பினரான பிரக்யா தாக்கூர், நாடாளுமன்றத்துக்கு உள்ளேயே கோட்சேவை புகழ்ந்து பேசியுள்ளார்.
Source : The Wire
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.