கொரோனா காலத்தில் கடன்களின் மீதான வட்டியை முழுமையாக ரத்து செய்ய முடியாது என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
கொரோனா காலகட்டத்தில் கடன்களின் மீதான வட்டியை முழுமையாக ரத்து செய்ய மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் உத்தரவிட வேண்டுமென வேண்டுகோள் விடுத்த மனுமீதான விசாரணையின்போது உச்சநீதிமன்றம் இவ்வாறு அறிவித்துள்ளதாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.
வட்டி மீது வட்டி தள்ளுபடி – நிதி வழங்குவதை உறுதி செய்க : ரிசர்வ் வங்கி
இந்த மனுவின் விசாரித்த நீதிமன்றம்,” வங்கிகளும் அதன் முதலீட்டாளர்களுக்கு வட்டியை செலுத்த வேண்டும் என்பதால் வாங்கிய கடனின் மீதான வட்டியை ரத்து செய்ய இயலாது ” என்றும் கூறியுள்ளதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொரோனா ஊரடங்கால் நாட்டு மக்களின் கடன் சுமை அதிகரிப்பு – ரிசர்வ் வங்கி தகவல்
மேலும் ,மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கியின் கடன்தள்ளுபடி கொள்கையில் தலையிட முடியாது என உச்சநீதிமன்றம் மறுத்துள்ளதாகவும் இந்தியா டுடே செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசின் முடிவுகளில் தலையிட முடியாது எனத் தெரிவித்த உச்சநீதிமன்றம், “பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான வழிகளை அரசு தான் முடிவு செய்ய வேண்டும் , அரசின் கொள்கை முடிவு தவறாக உள்ளபோது மட்டுமே நீதித்துறையின் அதிகாரம் தலையிடும் ” என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கியின் முன்னுரிமை கடன் வழிகாட்டல் : பாதிக்கப்படும் தமிழகம்
மேலும், வட்டியின் மீதான வட்டி விதிக்கப்படாது என்று உச்சநீதி மன்றம் தெரிவித்துள்ளதாகவும் இந்தியா டுடே செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.