Aran Sei

‘பாலஸ்தீனர்கள் படுகொலைக்கு கூட்டாளியாக மாட்டோம்’ – இஸ்ரேலுக்கு ஆயுதங்களை கப்பலில் ஏற்ற மறுத்த துறைமுக தொழிலாளர்கள்

காசா பகுதியில் தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கும் இஸ்ரேல் நாட்டிற்கு அனுப்பப்பட இருக்கும் ஆயுதங்களை கப்பலில் ஏற்ற இத்தாலிய துறைமுக தொழிலாளர்கள் சங்கம் மறுத்துள்ளது.

இந்தக் கப்பல் இஸ்ரேல் நாட்டின் அஸ்தோத் நகருக்கு செல்கிறது என்று சொல்லப்பட்டதால், இதில் பொருட்களை ஏற்றவில்லை என்று லிவர்னோ நகரத்தைச் சேர்ந்த தொழிலாளர் தெரிவித்துள்ளார்.

“லிவோர்னோ துறைமுகம் பாலஸ்தீனிய மக்கள் படுகொலைக்கு ஒரு கூட்டாளியாக இருக்காது.” என்று எல்’யூனியோன் சிண்டகலே டி பேஸ் (யூஎஸ்பி) என்ற சங்கம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

“கப்பலில் பாலஸ்தீனர்கள் கொல்ல உதவும் ஆயுதங்களும், வெடி மருந்துகளும்.” உள்ளதாக யூஎஸ்பி சங்கம் குற்றம்சாட்டியிருப்பதாக ஜெனிவாவை சேர்ந்த தி வெப்பன் வாட்ச் என்ற ஆய்வு நிறுவனம் கூறியுள்ளது.

மற்ற துறைமுகத்தைச் சேர்ந்தவர்கள் ஆயுதங்களை ஏற்ற எதிர்ப்பு தெரிவிக்காததால், நேபிள்ஸ் வழியாக அந்தக் கப்பல் இஸ்ரேலுக்கு சென்றதாக, தி நியூ அராப் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

”காசா மீதான தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும். இல்லையென்றால்  யூஎஸ்பி தொழிலாளர்கள் ஆர்பாட்டங்களில் ஈடுபடுவார்கள்.” என்று எச்சரித்து அந்தத் தொழிற்சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை, 58 குழந்தைகள், 38 பெண்கள் உட்பட குறைந்தபட்சம் 198 பேர் உயிரிழந்துள்ளனர். 1300க்கு அதிகமானோர் காயமடைந்துள்ளனர் என்று காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Source : Independent

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்