கர்நாடகாவில் இதுவரை முதல்கட்டமாக பாஜகவில் 36 ரவுடிகள் சேர்ந்துள்ளனர். இன்னும் 24 ரவுடிகள் அக்கட்சியில் சேர உள்ளனர். மாநிலத்தில் 150 ரவுடிகளை கட்சியில் சேர்த்துக் கொள்ள பாஜக பட்டியல் தயாரித்துள்ளது என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
கர்நாடக காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் லட்சுமண் பெங்களூருவில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில், “கர்நாடக பாஜகவில் சேர உள்ள ரவுடிகளின் பட்டியலில் வெளியிடுவோம் என்று கடந்த வாரம் கூறினோம். அதன்படி அக்கட்சியில் சேரவுள்ள ரவுடிகளின் பட்டியலை வெளியிடுகிறோம். கடந்த 2018-ம் ஆண்டு கர்நாடக காவல்துறையின் புள்ளி விவரங்கள்படி மாநிலத்தில் 23 ஆயிரம் ரவுடிகள் உள்ளனர். அந்த எண்ணிக்கை தற்போது 33 ஆயிரமாக அதிகரித்துள்ளது.
இதில் பெங்களூருவில் உள்ள ரவுடிகளின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 620 ஆக உள்ளது. இதில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வரும் ரவுடிகளின் எண்ணிக்கை 8 ஆயிரமாக உள்ளது. பெங்களூருவில் ஆயிரம் ரவுடிகள் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். அதில் பாஜகவில் 60 ரவுடிகள் சேர தயாராக உள்ளனர். அதனால் அக்கட்சி ரவுடிகள் அணி தொடங்கப்படும்.
கர்நாடகத்தில் இதுவரை முதல்கட்டமாக பா.ஜனதாவில் 36 ரவுடிகள் சேர்ந்துள்ளனர். இன்னும் 24 ரவுடிகள் அக்கட்சியில் சேர உள்ளனர். மாநிலத்தில் 150 ரவுடிகளை கட்சியில் சேர்த்துக் கொள்ள அக்கட்சி பட்டியல் தயாரித்துள்ளது.
புதிதாக சேர்க்கப்பட்ட ரவுடிகளில் 10 பேருக்கு சட்டசபை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்க பாஜக திட்டமிட்டுள்ளது. 26 ரவுடிகளுக்கு பெங்களூரு மாநகராட்சி தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படும் என்று அக்கட்சி முடிவு செய்துள்ளது.
மாநிலத்தில் மத வன்முறையை தூண்டி விடுவதில் சி.டி.ரவி முதன்மையானவர். அவருக்கு ரூ.3 ஆயிரம் கோடி சொத்துகள் உள்ளன. பினாமி பெயர்களில் சொத்துகளை குவித்துள்ளார். ரூ.800 கோடி சொத்து ஆவணங்களை நாங்கள் சேகரித்துள்ளோம் என்று லட்சுமண் தெரிவித்துள்ளார்.
Trichy Surya Siva quits BJP | Annamalai | Kesava Vinayagam | Daisy | Gayathri BJP | Deva’s Update 68
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.