இன்று (ஜனவரி 28) அரசுப் பணிகளில் உள்ள பட்டியல் சாதி மற்றும் பழங்குடியினர் ஊழியர்களுக்குப் பதவி உயர்வு வழங்குவதற்கான இட ஒதுக்கீடு அளவுகோல்களை வகுக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
அரசுப் பணிகளில் உள்ள பட்டியல் சாதி மற்றும் பழங்குடியினர்களின் பிரதிநிதித்துவத்தின் போதாமை குறித்த தகவல்களை அனைத்து மாநிலங்களும் சேகரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்குப் பிறகும் கூட பட்டியல் சாதி மற்றும் பழங்குடியின மக்கள், முன்னேறிய வகுப்பினருக்கு இணையான தகுதிக்குக் கொண்டு வரப்படவில்லை என்பதுதான் உண்மை என்று ஒன்றிய அரசு உச்சநீதிமன்றத்தில் கூறியுள்ளது.
Source : The Hindu
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.