Aran Sei

‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்தை விமர்சித்த பட்டியலினத்தவர் – மன்னிப்பு கேட்கவைத்து வன்கொடுமை செய்த இந்துத்துவாவினர்

ராஜஸ்தான் மாநிலத்தில், ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்தை விமர்சித்து பேஸ்புக்கில் பதிவு ஒன்றை எழுதிய பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ராஜேஷ் குமார் மேக்வால் என்பவரை ஆல்வார் மாவட்டத்தில் அமைந்திருக்கும் கோயிலில் உள்ள ஒரு மேடையில் மூக்கைத் தேய்க்க கட்டாயப்படுத்தப்பட்டுள்ளார்.

ராஜஸ்தான்: மீசையுடன் வலம் வந்ததால் கொலை செய்யப்பட்ட பட்டியலின இளைஞர்

ராஜேஷ் குமார் மேக்வால் கோயிலில் மூக்கைத் தேய்க்கும் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலானதை தொடர்ந்து நேற்று (மார்ச் 22) இரவு 11 பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த காவல்துறையினர் 2 பேரை கைது செய்துள்ளது.

தனியார் வங்கியில் பணிபுரியும் மேக்வால் என்பவர் 2-3 நாட்களுக்கு முன்பு பேஸ்புக்கில் ‘காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்தை விமர்சித்து ஒரு பதிவு ஒன்றை எழுதியிருந்தார். அந்த பதிவில், வன்கொடுமைகள் என்பது பண்டிட்டுகளுக்கு மட்டுமா நடந்தது, தலித்துகளுக்கு நடக்கவில்லையா என்று அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

ம.பி: பட்டியல் சமூகப் பெண்ணுக்கு கோவிலில் நுழைய அனுமதி மறுப்பு – பூசாரி கைது

அன்றாடம் வன்கொடுமைகள் நடக்கும் ஏழைகளுக்கு இங்கு எந்த பாதுகாப்பும் இல்லை என்று மேக்வால் அந்த பதிவில் தெரிவித்திருந்தார். அந்த பதிவிற்கு எதிர்வினையாற்றிய சிலர் ஜெய் ஸ்ரீ ராம் என்றும் ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா என்று எழுதியிருந்தனர். அதனால் அந்த கடவுள்களுக்கு எதிரான சில கருத்துக்களின் வழியாக அவர்களுக்கு அவர் பதில் அளித்தார். இத்தகைய கருத்துக்கள் பலரையும் கோபமடையச் செய்துள்ளது.

அதனால் ராமர் மற்றும் கிருஷ்ணர் குறித்து அவர் கூறிய கருத்துக்களுக்கு அவர் பேஸ்புக்கில் மன்னிப்பு கேட்டுள்ளார். ஆனால் மேக்வால் வசித்து வந்த ஊரின் உள்ளூர் மக்கள் கோயிலில் வந்து அவரை மன்னிப்பு கேட்கும் படி கட்டாயப்படுத்தியுள்ளனர். அவர் கோயிலுக்கும் சென்று மன்னிப்பு கேட்டுள்ளார்.

ராஜஸ்தான்: காவல்துறை பாதுகாப்போடு திருமண ஊர்வலத்தில் குதிரை சவாரி செய்த தலித் ஐபிஎஸ் அதிகாரி

ஆனால் கோயிலில் இருந்த சிலர் அங்குள்ள ஒரு மேடையில் அவரது மூக்கை தேய்க்கும்படி வற்புறுத்தியதால், வேறு வழியின்றி அவர் அங்கு மூக்கை தேய்த்துள்ளார் என்று கிராம நிர்வாக அதிகாரி பெஹ்ரோர் ஆனந்த் குமார் தெரிவித்துள்ளார்.

Source : newindianexpress

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்