ஹைதராபாத்தில் உள்ள வனஸ்தலிபுரத்தில் பட்டியல் சமூகப் பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
வனஸ்தலிபுரத்தில் உள்ள வெங்கடேச பெருமாள் கோயிலில் கடந்த 14 ஆண்டுகளாக ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருபவர் நக்கா நாதமுனி கவுட். இக்கோயிலுக்கு அடிக்கடி வரும் பட்டியல் இனப் பெண்ணான யாதகிரி பிரேமலதா என்பவருடன் நாதமுனிக்கு பழக்கம் ஏற்பட்டு பின்னர் காதலாக மாறியது.
கோவிலில் உள்ள அறையில் தங்கி பணி செய்து வந்துள்ளார் நாதமுனி. இரண்டு மாதங்களுக்கு முன் யாதகிரி பிரேமலதா என்ற பட்டையல் சமூகப் பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதையறிந்த கோயில் கமிட்டி தலைவர் லட்சுமையா உள்ளிட்ட நிர்வாகிகள் நாதமுனியை பணி நீக்கம் செய்துள்ளனர். சனிக்கிழமையன்று யாதகிரி பிரேமலதா லக்ஷ்மையாவின் வீட்டுக்குச் சென்று கணவரை பணி நீக்கம் செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். மேலும், தன்னை சாதியின் பெயரால் திட்டியதாக பாதிக்கப்பட்ட பெண் குற்றம் சாட்டியுள்ளார்.
“குழந்தையின் வாயில் புணர்வது மிகப்பெரிய குற்றமல்ல” – அலகாபாத் உயர்நீதிமன்றம் விளக்கம்
கோவிலில் நாதமுனி தங்கியிருந்த அறையின் பூட்டை உடைத்து அதிலிருந்த பொருட்களை வெளியே வீசியதாகவும் கோவில் கமிட்டியினர் தங்கள் சீடர்களுடன் சேர்ந்து தாக்கியதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது எஸ்சிஎஸ்டி வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
source: sumantv
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.