உத்திரபிரதேச மாநிலம் கோட்வாலி தேஹாட் காவல் நிலையத்தில், பறிமுதல் செய்யப்பட்ட கள்ளச்சாராயம் காணாமல் போனதற்கு எலிகள் தான் காரணம் எனக் காவல்நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காவல்நிலைய அதிகாரிகளின் சர்ச்சைக்குரிய இந்தக் கருத்தை அடுத்து, தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
கோட்வாலி தேஹாட் காவல் நிலையத்தில், பறிமுதல் செய்யப்பட்டு 1,400 பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்த கள்ளசாராயம் காணாமல் போனது தொடர்பாக, காவல் நிலைய அதிகாரி இந்த்ரேஷ்பால் சிங், எழுத்தர் ரிஷால் சிங் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து காவல் நிலையத்தில் உள்ள பொது நாட்குறிப்பு ஒன்றில், 239 பெட்டிகள் எலிகளால் சேதப்படுத்தப்பட்டிருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
அமேசான் நிறுவனத்தில் உருவாகிறதா தொழிற்சங்கம்? – தொழிலாளர்களிடையே இன்று வாக்கெடுப்பு
இந்தச் சம்பவம்குறித்து விசாரணை நடந்து வருவதாக கூறியுள்ள ஏடா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உதய் சங்கர் சிங், இதுகுறித்து மேலும் விரிவாகக் கூற மறுத்துவிட்டார்.
இந்த்ரேஷ்பால் சிங், ரிஷால் சிங் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாகத் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியும், இருவரும் விளக்கம் அளிக்கவில்லை எனவும் உதய் சங்கர் சிங் தெரிவித்துள்ளார்.
Source : PTI
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.