ராணுவத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் ஆட்சேர்க்கும் அக்னிபத் திட்டத்திற்கு எதிராக பஞ்சாப் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பிரதான எதிர்கட்சியான காங்கிரஸ் கட்சி தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் பாஜகவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் அஸ்வினி சர்மா, ஜாங்கி லால் மகாஜன் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மன், அக்னிபத் திட்டம்குறித்து விரைவில் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரிடம் எழுப்பேன் என்று கூறியுள்ளார்.
டெல்லி: போலீஸ் காவலை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் முகமது ஜூபைர் மனுத் தாக்கல்
ஆதரித்து பேசிய எதிர்கட்சித் தலைவரும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினருமான பிரதாப் சிங் பஜ்வா, திட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
அக்னிபத் திட்டத்தை உடனடியாக திரும்ப பெறுவதற்கு ஒன்றிய அரசை வலியுறுத்த மாநில அரசை தீர்மானம் கோரியுள்ளது.
ஒருதலை பட்சமாக ஒன்றிய அரசு அறிவித்த அக்னிபத் திட்டத்தால், பஞ்சாப் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது” என்று பகவந்த் மன் தெரிவித்துள்ளார்.
”ஒன்றிய அரசின் இந்த கொள்கை நாட்டின் ஆயுதப் படைகளுக்கு வாழ்நாள் முழுவதும் சேவை செய்ய விரும்பும் இளைஞர்களிடையே அதிருப்தி உருவாக்க வாய்ப்புள்ளது.” என்று அவர் கூறியுள்ளார்.
பஞ்சாபைச் சேர்ந்த ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் நாட்டின் ஆயுதப்படைகளில் பணியாற்றுகின்றனர். அவர்களில் பலர் ஆண்டுதோறும் நாட்டின் எல்லைகளில் உயிர்த் தியாகம் செய்கின்றனர் என்பதை முன்னிப்படுத்த வேண்டும் என்று பகவந்த் மன் குறிப்பிட்டுள்ளார்.
”பஞ்சாப் இளைஞர்கள் இந்திய ஆயுதப்படைகளிள் பணியாற்றுவதை பெருமையாகவும் மரியாதையாகவும் கருதுகின்றனர், மேலும் அவர்களின் வீரம் மற்றும் தைரியத்திற்காக புகழ்பெற்றவர்கள்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
“இந்த திட்டம் வழக்கமான ராணுவ வீரர்களாக ஆயுதப்படைகளில் சேர விரும்பும் பஞ்சாபின் பல இளைஞர்களின் கனவுகளை நசுக்கியுள்ளது. இந்த திட்டம் ஆயுதப் படைகளின் நீண்டகால உணர்வை பலவீனப்படுத்தும் போக்கையும் கொண்டுள்ளது என்று தீர்மானத்தை முன்மொழியும்போது பகவந்த் மான் கூறியுள்ளார்.
Source: The New Indian Express
அதிமுகவும் பாஜகவும் ஒண்ணு ! அறியாதவன் வாயில மண்ணு ! Nakkeeran Prakash Latest Interview | ADMK Issue
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.