Aran Sei

”நான் வாழும் காலம் வரை, வங்கப் புலி போல வாழ்வேன்” – ஜே.பி.நட்டாவிற்கு மம்தா பானர்ஜி பதிலடி

மேற்கு வங்காள தேர்தல் பிரச்சாரத்தின்போது, ஜே.பி.நட்டாவிற்கு கடுமையான பதிலடி கொடுக்கும் வகையில், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பேசியுள்ளதாக என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.

“நான் பலவீனமாக இல்லை. நான் பலமாக இருக்கிறேன். நான் உயிருடன் இருக்கும் காலம்வரை தலை நிமிர்ந்து நடப்பேன். நான் வாழும் காலம் வரை கம்பீரமா, வங்கப் புலிபோல வாழ்வேன்” என பிரச்சார கூட்டம் ஒன்றில், மம்தா பானர்ஜி பேசியதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் பலரும், அந்தக் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்து வருவதன் தொடர்ச்சியாக, அந்த மாநிலத்தின் முன்னாள் வனத்துறை அமைச்சர் ராஜீப் பானர்ஜி, பாஜகவில் இணைந்ததை சுட்டிக்காட்டி, மம்தா இவ்வாறு பேசியதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எக்ஸ்ரே கண்டுபிடித்த ராண்ட்ஜென் – நோபல் தொகையை ஆய்வுக்கு அர்ப்பணித்த, காப்புரிமையை எதிர்த்த மக்கள் விஞ்ஞானி

முர்ஷிதாபாத்தில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்ட மம்தா பானர்ஜி, 1757 ஆம் ஆண்டு நடைபெற்ற பிளாசிப் போரில், நவாப் சிராஜ்-உத்-தவுலாவின் ராணுவ தளபதியாக இருந்த மீர் ஜாபர், நவாப்பிற்கு எதிராக, ஆங்கிலேயருடன் இணைந்து போரிட்டதை மேற்கோள் காட்டி, வங்காளம் துரோகிகளை ஒருபோதும் மன்னிக்காது எனக் கூறியதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

” ரூ 12,500 கோடி பணத்தை இந்திய அரசு உடனடியாக தர வேண்டும் ” – வரி வழக்கு தொடர்பாக பிரிட்டனின் கெய்ர்ன் நிறுவனம்

முன்னதாக, தாராபித்தில் பேசிய பாஜக தேசிய தலைவைர் ஜே.பி.நட்டா ”பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் உள்ள 11 கோடி விவசாயிகளுக்கு, தலா 14 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டிருக்கிறது… ஆனால் மேற்கு வங்காளத்தில் 73 லட்ச விவசாயிகளுக்கு இது மறுக்கப்பட்டு விட்டது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால், எங்கள் முதல் அமைச்சரவை கூட்டத்திலேயே விவசாயிகளுக்குப் பணம் அளிக்கப்பட்டது உறுதி செய்யப்படும்” எனப் பேசியதாக, என்டிடிவி தெரிவித்துள்ளது.

நட்டாவின் இந்தக் குற்றச்சாட்டிற்கு பதிலளித்துள்ள மம்தா, ”பாஜக பொய்களை மட்டுமே கூறிவருகிறது. விவசாயிகளுக்குப் பணம் அளிப்பதை நான் தடுப்பதாக, பாஜக குற்றச்சாட்டுகிறது. ஆனால் உங்களுக்குக் கிரிஷக் பந்து (மாநில அரசுத் திட்டம்) திட்டம் கிடைக்கவில்லையா? இப்போது மோடி அவர் உறுதியளித்த பணத்தை அனுப்ப சொல்லுங்கள். நாங்கள் பெயர்களை அனுப்பிவிட்டோம், ஆனால் அவர்களைப் பணம் அனுப்பவில்லை… தினம் பொய்களைப் பரப்பிவருகின்றனர்” எனக் கூறியதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வருமானத்தை கண்காணித்து வரி வசூலிக்க புது நடவடிக்கைகள் – கருப்புப் பணத்தை ஒழிக்குமா? – ஷியாம் சுந்தர்

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிப் பாஜகவில் இணைந்த மூத்த தலைவர்கள்குறித்து பேசிய மம்தா, “துஷ்ட மாடுகள் இருக்கும் தொழுவத்தை விட, காலியான மாட்டுத் தொழுவம் சிறந்து (துஷ்டு கோரூர் சே பங்கா கோவல் பாலோ)” என்ற வங்காள பழமொழியை குறிப்பிட்டதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமுருகன் காந்தியின் டிவிட்டர் கணக்கு முடக்கம் – விதிகளை மீறியதாக டிவிட்டர் நிறுவனம் தகவல்

கொரோனா ஊரடங்கு காலத்தில், சரஸ்வதி பூஜைக்கு அனுமதியளிக்காத மம்தா அரசாங்கம், மொஹரம் கொண்டாட்டங்களுக்கு அனுமதியளித்து என்ற நட்டாவின் குற்றச்சாட்டிற்கு, “அவர்கள் ஹிந்துக்கள் பற்றிப் பொய்களைக் கூறி வருகின்றனர். நாங்கள் ஹிந்துக்கள் இல்லையா?. நாங்கள் ஹிந்துக்கள் என்பதால் இஸ்லாமியர்களை எதிர்ப்போம்… நாங்கள் ஹிந்துக்கள் என்பதால் பௌத்தர்களை எதிர்ப்போம்… என்று நாங்கள் கூறுவதில்லை. அது நம் கலாச்சாரத்திலும் இல்லை” என மம்தா பதிலளித்திருப்பதாக என்டிடிவி கூறியுள்ளது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்