Aran Sei

எல்ஐசி நஷ்டமடைய வற்புறுத்தலா? – அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் குற்றச்சாட்டு

credits : the economic times

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, ஐடிபிஐ வங்கியின் நிர்வாகக் கட்டுப்பாட்டை மாற்றுவதோடு, முதலீடு செய்வதையும் படிப்படியாக குறைத்து, அரசு மற்றும் எல்ஐசி (இந்திய ஆயுள் காப்பீட்டு கழகம்) தன்னுடைய பங்கை குறைத்து கொள்வதற்கான கொள்கை ரீதியான ஒப்புதலையும் வழங்கியுள்ளது.

இதையடுத்து எல்ஐசி, அரசாங்கத்துடன் இணைந்து, ஐடிபிஐ வங்கியின் பங்குகளை குறைப்பதற்கான தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. அதில், ”விலை, சந்தைக் கண்ணோட்டம், சட்டரீதியான நிபந்தனை மற்றும் பாலிசிதாரர்களின் ஆர்வத்தை கருத்தில் கொண்டு, நிர்வாகக் கட்டுப்பாட்டைக் கைவிடுகிறோம் ” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐடிபிஐ வங்கியில் அரசு 45.48 சதவீத பங்கையும், எல்ஐசி 49.24 பங்கையும்  வைத்துள்ளன.

இந்திய ரிசர்வ் வங்கியுடன் கலந்தாலோசித்து ஒப்பந்தத்தை கட்டமைக்கும் அதே வேளையில், அரசாங்கமும் எல்ஐசியும்,  பங்குகளை குறைக்கும் அளவு தொடர்பாக தீர்மானிக்கப்பட இருப்பதாகவும், ஐடிபிஐ வங்கியில் எல்ஐசியின் பங்குகளை 15 சதவீதத்திற்குக் குறைப்பதற்கான காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் (இர்டாய்) ஆணைக்கு ஏற்ப, எல்.ஐ.சி முடிவு  எடுக்க இருப்பதாகவும் பிசினஸ் ஸ்டேண்டர்ட் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

‘உத்தர பிரதேசத்தில் மனிதனாக இருப்பதை விட மாடாக இருப்பதே மேல்’ – சஷி தரூர்

அமைச்சரவையின் ஒப்புதல், முதலீடு மற்றும் பொது சொத்து மேலாண்மை (டிஐபிஏஎம்) ஆணயம் முதலீட்டை குறைக்கவும், விற்பனைக்கு இடைத்தரகர்களை நியமிக்கவும் அதிகாரத்தை வழங்கும்.

நீதிமன்ற உரையாடல்களை ஊடகங்கள் வெளியிடத் தடை கோரிய தேர்தல் ஆணையம் – பேச்சு சுதந்திரத்திற்கு எதிரானது என உச்சநீதிமன்றம் மறுப்பு

”இந்த பங்குகளை வாங்குபவர் நிதியை வழங்க வேண்டும். புதிய தொழில்நுட்பத்தை கொண்டு வர வேண்டும் மற்றும் ஐடிபிஐ வங்கியின் வளர்ச்சிக்கு சிறந்த மேலாண்மை நடைமுறைகளை செயல்படுத்த வேண்டும். எல்.ஐ.சி அல்லது அரசாங்கத்தை நிதிக்காக நம்பாமல் கடன் வழங்குபவருக்கு இது “அதிக” வணிகத்தை உருவாக்க வேண்டும்” என்று அரசாங்கம் வெளியிட்ட  அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

NO MEANS NO – ஏன் இது ஆண்களுக்கு புரியவில்லை ? – வன்புணர்வு வழக்கில் இமாச்சல பிரதேச உயர் நீதிமன்றம் கேள்வி

2020-21க்கான வரவுசெலவுத் திட்டத்தில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஐடிபிஐ வங்கியில் அரசாங்கத்தின் பங்குகளை தனியார், சில்லறை மற்றும் நிறுவன முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தை மூலம் விற்கப்போவதாக அறிவித்திருந்தார். எ, பெருந்தொற்று பரவலால் அரசாங்கத்தின் திட்டம் நிறைவேறவில்லை. இந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் நிர்மலா சீதாராமன், ஐடிபிஐ வங்கி தொடர்பான திட்டம் உட்பட, பல பரிவர்த்தனைகள் 2021-22 ஆம் ஆண்டில் நிறைவடையும் என்று அறிவித்திருந்தார்.

கொரோனா மூன்றாவது அலை தவிர்க்க முடியாதது – மத்திய அரசுக்கு முதன்மை அறிவியல் ஆலோசகர் எச்சரிக்கை

மேம்பட்ட நிதி செயல்திறன் குறித்து மார்ச் மாதத்தில் ஐடிபிஐ வங்கி ரிசர்வ் வங்கியின் உடனடி திருத்த நடவடிக்கை (பிசிஏ) கட்டமைப்பிலிருந்து நீக்கப்பட்டது. கடன் வழங்குபவர் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு 21 ஆம் நிதியாண்டில் லாபகரமாக மாறியதுடன், கடந்த நிதியாண்டில் ரூ .12,887 கோடி நிகர இழப்புக்கு எதிராக இந்த நிதியாண்டில் 1,359 கோடி ரூபாய் நிகர லாபம் ஈட்டியுள்ளது.

பகுத்தறிவாளர் நரேந்திர தபோல்கர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கு – குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு பிணை வழங்கிய மும்பை நீதிமன்றம்

இந்நிலையில் அரசின் இந்த முடிவைக் கண்டித்து, அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் எல்ஐசி நஷ்டமடைய மத்திய அரசு வற்புறுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2020 ஆம் ஆண்டு ஐடிபிஐயின் வங்கியின் ஒரு பங்கு ரூ.60 என 30,000 கோடிக்கு எல்ஐசி வாங்கியது என்றும், தற்போது ஐடிபிஐயின் பங்கு ரூ.40 ஆக உயர்ந்துள்ள நிலையில், பங்குகளை விற்கச்சொல்லி எல்ஐசி நிறுவனம் மத்திய அரசால் நிர்பந்திக்கப்படுகிறது என்றும் அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் கூறியுள்ளது. இதனால், எல்ஐசி நிறுவனம் 9,000 கோடி நஷ்டத்தை சந்திக்கும் என்று அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் (AIBEA) குற்றம் சாட்டியுள்ளது..

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்