Aran Sei

எல்ஐசியின் தனிநபர் ஆயுள் காப்பீடு வருமானம் மிகப்பெரிய வீழ்ச்சி – எச்டிஎஃப்சி வருமானம் உயர்வு

ந்த ஆண்டு ஜனவரி மாதத்தில், எல்ஐசியின் தனிநபர் ஆயுள் காப்பீடு வருமானம் (Annual Premium Equivalent), மிகப் பெரிய அளவில் சரிவைச் சந்தித்துள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

தனிநபர் ஆயுள் காப்பீடு வருமானம் 45 சதவீதம் குறைந்துள்ளதாகவும் இதனால், ஜனவரி மாதத்தில் எல்ஐசியின் வளர்ச்சி 8 சதவீதமாக உள்ளது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுத்துறை வங்கிகளைத் தனியாருக்கு விற்கும் மத்திய அரசு: நாடு முழுவதும் இரண்டு நாட்கள் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்

2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில், தனிநபர் ஆயுள் காப்பீட்டின் வருமானம், 99 சதவீதம் வளர்ச்சியடைந்தது. இது ஒரு மிகப்பெரிய வளர்ச்சி என்பதால், அதை அடிப்படையாக வைத்துக் கணக்கிடுவதால், இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் வருமானம் மிகப்பெரிய வீழ்ச்சியடைந்துள்ளதாக தி இந்து தெரிவிக்கிறது.

இருந்தபோதும், கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட 3 சதவீத வளர்ச்சியையும், நவம்பர் மாதத்தில் ஏற்பட்ட 7 சதவீத வீழ்ச்சியையும் ஒப்பிடுகையில், ஜனவரி மாதத்தில் தனிநபர் ஆயுள் காப்பீட்டின் வருவமானம் அதிகரித்துள்ளதாகக் கோடாக் செக்யூரிட்டிஸ் நிறுவனத்தின் தரவுகள் தெரிவிப்பதாக தி இந்து கூறுகிறது.

“இந்தியாவின் இஸ்லாமியராக இருப்பதில் பெருமைகொள்கிறேன்” – நாடாளுமன்றத்தில் குலாம் நபி ஆசாத் உருக்கம்

இந்த மிதமான வளர்ச்சி, ஆயுள் காப்பீட்டுடன் கூடிய முதலீட்டு திட்டத்திடத்தை உள்ளடக்கிய (ULIP) காப்பீடுகளின் தேவை உயர்ந்துள்ளதை குறிப்பதாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் காப்பீட்டு நிறுவனங்களை பொறுத்தவரை, எச்டிஎஃப்சி ஆயுள் காப்பீட்டு நிறுவனம், 24 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளதாகவும், கடந்த இரண்டு மாதங்களை ஒப்பிடுகையில், 4 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளதாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

மீண்டும் நாடாளுமன்றத்தில் வெடித்தெழுந்த மஹுவா – அரசின் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு

ஐசிஐசிஐ புருடென்சியல் நிறுவனம் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 5 சதவீதம் சந்தித்தபோதும், அதை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் அந்த நிறுவனம், 7 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் தி இந்து தெரிவிக்கிறது.

எஸ்பிஐ நிறுவனம், 1 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்