Aran Sei

‘கோட்சே’ பெயரில் கல்வி நிலையம்: எதிர்ப்பு வலுத்ததால் மூடிய இந்து மகாசபை

credits : the new indian express

கடந்த ஜனவரி 10-ம் தேதியன்று மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியர் மாவட்டத்தில், மகாத்மா காந்தியைச் சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சேவின் பெயரில் நூலகத்துடன் கூடிய கல்வி நிலையத்தை மத்தியப் பிரதேச மாநில இந்து மகாசபை தொடங்கியிருந்தது.

இதுகுறித்து, இந்து மகா சபையின் செயற்பாட்டாளர் ஒருவர், “இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை குறித்து, இளைஞர்களுக்கு கல்வி கற்பிப்பதும் விழிப்புணர்வை பரப்புவதுமே இதன் அடிப்படை நோக்கமாகும். இங்கு மகாராணா பிரதாப் போன்ற வரலாற்று ஆளுமைகளைப் பற்றிய புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன.” என்று கூறியுள்ளார்.

ஷாஹீன்பாக்கில் துப்பாக்கிச் சூடு நடத்திய கபில் குஜ்ஜார், பாஜகவுக்கு ஏன் முக்கியமானவர்? – அலிஷான் ஜாஃப்ரி

மேலும் அவர் “1947 ஆம் ஆண்டு, இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக்குப் பின்னால் இருந்தது காங்கிரஸ் கட்சிதான் என்பதை நாம் மறந்துவிடமுடியாது. ஆகவே, வரும் தலைமுறையினருக்கு இந்தியா பாகிஸ்தான் பிரிவினை குறித்து முழுமையான வரலாறு தெரியும்படி செய்யவேண்டும். அவ்வகையில் ‘நாதுராம் கோட்சே கியான்ஷாலா’ கல்வி நிலையம், இந்தியப் பிரிவினையின் பல்வேறு அம்சங்களைப் பற்றி, இளம் தலைமுறையினருக்கு கற்பிக்கும். அதற்கான நூலகமாகவும் இந்நிலையம் விளங்கும்” என்று அவர் தெரிவித்திருந்தார்.

’கோட்சே’ பெயரில் கல்வி நிலையம் – ’இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை’ குறித்து கற்பிக்க இந்து மகாசபை திட்டம்

மேலும், இங்கு கற்பிக்கப்படும் கல்வியின் வழியாக குரு கோபிந்த் சிங். சத்ரபதி சிவாஜி மகாராஜ், மகாராணா பிரதாப் மற்றும் இந்து மகாசபையின் தேசிய துணைத் தலைவர் ஜெயவீர் பரத்வாஜ் போன்ற தேசியத் தலைவர்கள் பற்றிய தகவல்களும் சொல்லிக்கொடுக்கப்படும் என்று இந்து மகா சபையின் செயற்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.

காந்தியாரும் “அந்த” ஐம்பத்தைந்து கோடியும் – திப்பு

இந்நிலையில், தேசத்தந்தை மகாத்மா காந்தியைக் கொலை செய்த கோட்சேவின் பெயர் கல்வி நிலையத்திற்கு சூட்டப்பட்டிருந்ததால் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து, கல்வி நிலையத்தை மூடுவதாக குவாலியர் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

’நாங்கள் இயேசுநாதரை சுட்டுக் கொன்ற கோட்சேவா?’ – வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

இந்தச் சம்பவம் தொடர்பாக பேசிய குவாலியர் மாவட்டத்தின் கூடுதல் மாவட்ட நீதிபதி கிஷோர் கன்யால், அந்தப் பகுதியின் அமைதிக்கு குந்தகம் ஏற்படுவதை தடுக்க கல்வி நிலையத்தைப் பற்றிய தகவல் வந்ததுமே அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கபட்டதாக தெரிவித்துள்ளார்.

ஷாஹீன்பாக்கில் துப்பாக்கிச் சூடு நடத்திய கபில் குஜ்ஜார், பாஜகவுக்கு ஏன் முக்கியமானவர்? – அலிஷான் ஜாஃப்ரி

இந்தப் பிரச்சனை தொடர்பாக இந்து மகாசபை உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட கன்யால், “ இந்தப் பகுதியின் அமைதியை கெடுக்கும் எந்த செயலுக்கும் அனுமதியளிக்கப்படாது” என்று தெரிவித்துள்ளார். ”சட்டத்தை மீறி எதையும் செய்ய மாட்டோம்” என்று கூறிய இந்து மகாசபை உறுப்பினர்கள் கல்விநிலையத்தை மூடி விடுவதாக தெரிவித்துள்ளனர்.

தரவு மூலம்: பிடிஐ

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்