Aran Sei

ஓரினசேர்கையாளரை பணி நீக்கிய அரசு – மீண்டும் பணியில் அமர்த்திய நீதிமன்றம்

credits : the new york post

ரினசேர்கையாளர் என்பதால் பணியிலிருந்து நீக்கப்பட்டவரை மீண்டும் பணியில் அமர்த்துமாறு அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக லைவ் லா செய்தி வெளியிட்டுள்ளது.

உத்தர பிரதேசத்தின், புலந்த்ஷாஹர் மாவட்டத்தில், ஊர் காவல் படையில் ஒருவர் காவலராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருடைய  வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைராலாகியுள்ளது.

அந்த வீடியோவின் மூலம் நியமிக்கப்பட்ட நபர் ஒரே பாலின ஈர்ப்பாளர் என்பது தெரிய வந்துள்ளது. ஒரே பாலின ஈர்ப்பாளர் என்பதால் அவர் ”முறையற்ற” நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடும் எனத் தெரிவித்த புலந்த்ஷாஹர் மாவட்ட ஊர் காவல் படை தலைவர், அவருடைய பணி நியமனத்தை நிராகரித்துள்ளதாகச் சப்ரங் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

தைவான் ராணுவத்தில் ஒரே பாலின ஈர்ப்பாளர்களுக்குத் திருமணம்

இந்நிலையில் இந்த வழக்கு அலகாபாத் உயர் நீதிமன்றத்தில், நீதிபதி சுனிதா அகர்வால் தலைமையிலான அமர்வுக்கு முன் விசாரணக்கு வந்துள்ளது.

‘ஒரு பாலின இணையர்களுக்குக் குடும்ப உரிமை உள்ளது’ – போப் பிரான்சிஸ்

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, கடந்த 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், ”ஒரே பாலினத்தைச் சேர்ந்த வயது வந்த இருவர், உடல் ரீதியான உறவு கொள்வது சட்ட விரோதமானது அல்ல” என்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மேற்கோள் காட்டி, “வெகுகாலமாக, எல்ஜிபிடி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தங்களின் இணையருடன் பொது இடங்களில் அன்பை பரிமாறிக் கொள்கிறார்கள். அவர்கள் அநாகரீகமகாவோ பொது ஒழுங்கைக் கெடுக்கும் வகையிலோ நடந்துக் கொள்ளவில்லை.” என்று தெரிவித்துள்ளார்.

ஒரே பாலின திருமண விவகாரம் – சனாதனத்திற்கு இடமில்லை – நீதிபதி கருத்து

எனவே பெரும்பான்மை சமூகத்தின் கண்ணொட்டத்திற்காக அவர்களை புறக்கணிக்க  முடியாது” என நீதிபதி தெரிவித்துள்ளதாக சப்ரங்க் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

முகபாவனையை வைத்து, காவலர்களை எச்சரிக்கும் கேமரா – பெண்கள் பாதுகாப்பிற்கு உ.பி., அரசு திட்டம்

”ஒரு நபரின் பாலியல் ஈர்ப்பு என்பது அவருடைய தனிப்பட்ட தேர்வாகும், அதை ஒரு குற்றமாகக் கருதி மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு நடவடிக்கையும் சம்பந்தப்பட்ட நபரின் தனி மனித உரிமையில் தலையிடுவதாகவும்” என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.

கோவாக்சினும், கோவிஷீல்டும் ஒரே மாதிரியான சிகிச்சையை அளிக்கின்றனவா?

புலந்த்ஷாஹர் மாவட்ட ஊர் காவல் படை தலைவரின் உத்தரவை நிராகரித்த நீதிபதி அவரை உடனடியாக மீண்டும் பணியில் அமர்த்த உத்தரவிட்டுள்ளதாக லைவ் லா செய்தி வெளியிட்டுள்ளது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்