Aran Sei

தம்பதிகளாக அறிவிக்க தன்பாலின ஈர்ப்பாளர்கள் தொடுத்த வழக்கு: சமூகத்திற்கு பயன்படும் தீர்ப்பு வழங்குவேன் – நீதிபதி கருத்து

சென்னை உயர் நீதிமன்றத்தில், தன்பாலின ஈர்ப்பாளர்கள் தாக்கல் செய்துள்ள வழக்கை விசாரித்த நீதிபதி, ”என் மனதில் முன் கூட்டியே ஆழமாக பதிந்து இருக்கும் கருத்துக்கள், சொந்த விருப்பு வெறுப்புக்களுக்கு அப்பாற்பட்டு தான் இந்த வழக்கை அனுகுகிறேன்” என்று கூறியுள்ளார்.

தன்பாலின ஈர்ப்பாளர்களான 20 மற்றும் 22 வயது மதிக்கத் தக்க மாணவர்கள் இருவர்  சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில், ”கடந்த இரண்டு வருடமாக நாங்கள் பழகி வருகிறோம். எங்களைத் தம்பதியராக அங்கீகரிக்க வேண்டும். எங்களுடைய உறவுக்குப் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி, என்.ஆனந்த் வெங்கடேஷ் தலைமையிலான அமர்வுக்குமுன் விசாரணைக்கு வந்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரர்கள் தாக்கல் செய்துள்ள மனு மிகவும் தெளிவாக இருக்கிறது எனவும் அவர்கள் இருவரும் தங்களை தம்பதியராக மாற விரும்புவதை எந்தக் குழப்பமும் இன்றி  தெரிவித்துள்ளனர் எனவும் நீதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

கருத்து சுதந்திரம் என்ற பெயரில் விஷத்தை கக்கக் கூடாது: ஆர்.எஸ்.பாரதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம்

இது போன்ற வழக்கு தன்னுடைய நீதிமன்றத்திற்கு புதிது என கூறியுள்ள நீதிபதி, இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பெற்றோர் மனநல மருத்துவரிடம் சிகிச்சை எடுக்கப் பரிந்துரை செய்துள்ளார். மனநல மருத்துவர், பெற்றோருக்கு சிகிச்சை அளித்து, அதன் அறிக்கையை வரும் ஏப்ரல் 26 ஆம் தேதி, நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

வேதா நிலையம்: மறைந்த முதல்வர்கள் அனைவரின் வீடுகளையும் நினைவு இல்லமாக மாற்ற முடியாது – சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டம்

இந்த வழக்கைப் பொறுமையாக விசாரிப்பது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள நீதிபதி, மிகவும் முக்கியமான விவகாரம் என்பதால் இந்த விவகாரம் தொடர்பாக நேர்மையான மற்றும் நியாயமான முடிவுக்கு வருவதற்கு சிறிது கால தாமதம் ஏற்படும் என்று கூறியுள்ளார்.

வாரம் ஒருமுறை பேரறிவாளனை அற்புதம்மாள் சந்திக்கலாம் – சென்னை உயர் நீதிமன்றம்

மேலும், “இன்னும் வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமென்றால், என் மனதில் முன் கூட்டியே ஆழமாக பதிந்து இருக்கும் கருத்துக்கள், சொந்த விருப்பு வெறுப்புக்களுக்கு அப்பாற்பட்டு தான் இந்த வழக்கை அனுகுகிறேன். நான் என்னை மனதளவில் வளர்த்துக் கொள்ளும் முயற்சியில் இறங்கியுள்ளேன். மனுதாரர்கள் மற்றும் அவருடைய பெற்றோர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்ட பின்னர்தான் இந்த வழக்குப் பற்றிய முழுமையான தீர்ப்பு வெளியிடப்படும். அதனால் தான் இந்த வழக்கை மிகவும் பொறுமையாக விசாரித்து, இந்த வழக்கின் மூலம் சமூகத்திற்கு பயன்படும் ஒன்றை உருவாக்க முயல்கிறேன்” என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.

`சென்னைப் பெரு வெள்ளத்திற்குப் பிறகும் பாடம் கற்கவில்லையா?’ – உயர்நீதிமன்றம்

”பெரும்பான்மை மக்களின் கருத்து, அரசியலமைப்பு  வழங்கியுள்ள உரிமைகளைத் தீர்மானிக்க முடியாது. மக்கள் அனைவருக்கும் சமமான உரிமைகள் கிடைக்கப்பட வேண்டும்” என்று இந்திய தண்டனைச் சட்டத்தின், பிரிவு 377 நீக்கப்பட்டபோது, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஷ்ரா கூறியது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்