Aran Sei

விவசாயிகள் போராட்டத்தில் இணைய முன்னாள் ராணுவ வீரர்களுக்கு அழைப்பு – மேஜர் ஜெனரல் சத்பீர் சிங்

முன்னாள் ராணுவ வீரர்களும் அவர்களைச் சார்ந்தவர்களும் விவசாயிகளின் போராட்டத்திற்கு தங்கள் ஆதரவை வழங்கி,  தங்களை இணைத்துக்கொள்ள வேண்டும் என்றும் 70 சதவீதத்திற்கும் அதிகமான பாதுகாப்பு வீரர்கள் விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தான் என்றும் முன்னாள் ராணுவ வீரர்களின் ஐக்கிய முன்னணி தெரிவித்துள்ளது.

முன்னாள் படைவீரர்களின் ஐக்கிய முன்னணியின் ஆலோசகரும், இந்திய முன்னாள் ராணுவவீரர் சங்கத்தின் தலைவருமான ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் சத்பீர் சிங், மூன்று விவசாயச் சட்டங்களை ரத்து செய்யவும், குறைந்தபட்ச ஆதரவு விலைக்குச் சட்டப்பூர்வ உத்தரவாதத்தை வழங்கக்கோரியும், வாழ்வா சாவா போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு ஆதரவாக அணித்திரளுமாறு, தனது கடிதத்தில் ராணுவ வீரர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக டெலக்ராப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபடும் இராணுவ வீரர்கள் – புலனாய்வு அமைப்புகள் விசாரணை

ஜனவரி 16 ஆம் தேதியிட்ட அக்கடிதத்தில், “பாதுகாப்பு வீரர்களில் 70 சதவீதத்திற்கும் அதிகமானோர் விவசாய குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்.  ஆகவே, மூன்று விவசாய சட்டங்களை ரத்து செய்வதற்கான அமைதியான இந்தப் போராட்டத்திற்கு, முன்னாள் படைவீரர்களாகிய நாமும், நம்மை சார்ந்தவர்களும் ஆதரவளிப்போம்.” என்று அவர் கோரியுள்ளார்.

“நம்முடைய ஒற்றுமையை காட்டுவதற்காக, அனைத்து முன்னாள் ராணுவவீரர்களும் அவர்களைச் சார்ந்தவர்களும் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை டெல்லியில் உள்ள சிங்கு எல்லையில் ஜனவரி 20 ஆம் தேதி, திக்ரி எல்லையில் ஜனவரி 21 ஆம் தேதியும் மற்றும் காசிப்பூர் எல்லையில் ஜனவரி 22 ஆம் தேதியும் அணி திரளவேண்டும். வரும்போது, கண்டிப்பாக தங்களுடைய பதக்கங்களையும் ரிப்பன்களையும் அணிந்து வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.” என்று கடிதத்தில் அழைப்புவிடுக்கப்பட்டுள்ளதாக டெலக்ராப் இந்தியா தெரிவித்துள்ளது.

விளையாட்டு வீரர்களைத் தொடர்ந்து : ராணுவ வீரர்களும் பதக்கங்களைத் திருப்பி தர முடிவு

மேலும், விவசாய போராட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு முடிந்தவரை நன்கொடை வழங்குமாறு மேஜர் ஜெனரல் சத்பீர் சிங் சிங் வீரர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்