Aran Sei

போராடும் உழவர்களோடு பொங்கல் திருநாளை கொண்டாடுவோம் – சிபிஎம் அழைப்பு

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களைத் திரும்ப பெற கோரி தலைநகர் டெல்லியில் விவசாயிகள் போராடி வருவதால் இவ்வருட பொங்கல் பண்டிகையை உழவர்களோடு கொண்டாடுவோம் என்று மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) அழைப்பு விடுத்துள்ளது. இது குறித்து சிபிஎம் யின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

“அண்மைக் கால வரலாற்றில் மனித குலம் சந்தித்திராத பேரிடராக கொரோனா எனும் கொடும் தொற்றுநோய் உலகத்தை தாக்கிய பின்னணியில், இயற்கையோடு இயைந்தே மனித இனம் வாழ வேண்டும் என்பதை இந்த பேரிடர் பெரும் குரலெடுத்து கூறியிருக்கிறது. முதலாளித்துவத்தின் லாபவெறி இயற்கை வளங்களை சுரண்டுவது உலகின் இருப்புக்கே பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. ஆயினும், அறிவியலின் துணை கொண்டு எத்தகைய சூழலையும் சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கையும் ஏற்பட்டுள்ளது. சுற்றுச்சூழலையும், இயற்கை வளங்களையும், உழவுத் தொழிலையும் பாதுகாக்க இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் பொங்கல் நாளில் உறுதியேற்போம்” என்று தெரிவித்துள்ளார்.

‘அமித் ஷாவுக்கு போன் போட்டா கலவரம் ஆகிடும்’ – மிரட்டல் விடுத்த பாஜக பிரமுகர்கள் கைது

மத்தியில் ஆளும் மோடி அரசு கோடிக்கணக்கான விவசாயிகளிடமிருந்து விவசாயத்தை பறித்து கார்ப்பரேட்டுகளுக்கு கைமாற்றும் வகையில் மூன்று வேளாண் சட்டத் திருத்தங்களை நிறைவேற்றியுள்ளதாக குற்றஞ்சாட்டிய அவர், இந்தச் சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டால், விதை உரிமை, நிலவுரிமை, விளைபொருளுக்கு நியாயமான விலை கேட்கும் உரிமை உட்பட அனைத்து உரிமைகளையும் விவசாயிகள் இழக்க நேரிடும் என்றும்  செயற்கையான பற்றாக்குறையும் பஞ்சங்களும் உருவாக்கப்பட்டு மக்களின் உணவுப் பாதுகாப்பே கேள்விக் குறியாகிவிடும் என்று பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதானியின் இலாபவெறிக்குப் பலியாகப் போகும் சென்னை – பூவுலகின் நண்பர்கள்

ஆட்சியாளர்களின் ஆணவச் சட்டங்களை கிழித்து எறியும் வரை ஓயப்போவதில்லை என சூளுரைத்து உழவர்கள் நடத்தும் போராட்டம் நாட்டின் எதிர்காலம் குறித்த நம்பிக்கையை தருகிறார்கள் என்றும் விவசாயிகளின் கோபக் கனலின் குறியீடாகவே இந்த ஆண்டு பொங்கல் விழா அமைந்துள்ளதாகவும், இத்தகைய போராட்டங்களின் மூலமே விவசாயத்தை மட்டுமல்ல, இந்தத் தேசத்தையும் பாதுகாக்க முடியும். போராடும் உழவர்களோடு இணைந்து இந்தப் பொங்கலை கொண்டாடுவோம். போகி நெருப்பில் பழைய குப்பைகள் மட்டுமல்ல, நாட்டை நாசமாக்க துடிக்கும் வேளாண் திருத்தச் சட்டங்களும் எரிந்து சாம்பலாகட்டும் என்றும் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

‘உச்ச நீதிமன்ற குழுவில் மோடி ஆதரவாளர்கள்; எவ்வாறு விவசாயிகளுக்கு நீதி கிடைக்கும்?’ – காங்கிரஸ் கேள்வி

”ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி, ஒரே தேர்தல் என வெறித்தனமான ஒற்றைத் தன்மையை திணிக்க மத்திய பாஜக கூட்டணி அரசு துடிக்கிறது. பெரும்பகுதி மக்களின் எழுத்தறிவையும் கல்வியறிவையும் மறுத்து மீண்டும் குலக்கல்வி முறையை கொண்டு வரும் நோக்கத்துடன் புதிய கல்விக் கொள்கையை கொண்டு வந்துள்ளது” என்று அவர் குற்றஞ்சாட்டினார்.

மொழி திணிப்பு நாட்டின் ஒற்றுமையை சீர்குலைப்பதாக தெரிவித்த அவர்,ஒருமைப்பாட்டையும் மதச்சார்பின்மை போன்ற உன்னத விழுமியங்களைப் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார். தமிழகம் இந்தாண்டு தேர்தலை சந்திக்க உள்ள நிலையில் மக்கள் விரோத அரசை அகற்றப்படுவது காலத்தின்  கட்டாயமென்று  மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

 

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்