பிப்ரவரி 20 அன்று இரவு கர்நாடகாவின் ஷிவமொக்காவில் பஜ்ரங் தள் மற்றும் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பில் தன்னார்வலரான ஹர்ஷா பாரதி காலணி அருகே ஒரு கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். இதை தொடர்ந்தது சிவமொக்காவில் வன்முறை வெடித்தன. ஹர்ஷாவின் குடும்பத்திற்கு ஆறுதல் கூற பாஜக தலைவர்களும், இந்துத்துவ தலைவர்களும் வந்திருந்தனர்.
அப்போது பத்திரிக்கையாளர்களிடம் 2 கைகளைக் கூப்பியவாறு ஹர்ஷாவின் சகோதரி அஸ்வினி பேசியுள்ளார். அதில், அனைத்து இளைஞர்களும், எந்த மதத்தைச் சார்ந்தவராக இருந்தாலும், வெறுப்பைக் கைவிட்டு, ஒருவரையொருவர் சகோதரர்களாகப் பாவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இதை நான் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களிடம் மட்டும் கூறவில்லை. ஏனெனில் அனைத்து பெற்றோர்களுக்கும் குழந்தைகள் உள்ளன. உங்களுக்கு ஏதாவது நேர்ந்தால் பாதிக்கப்படுவது உங்கள் பெற்றோர்கள்தான் ” என்று அஸ்வினி கூறியுள்ளார்.
கர்நாடகாவில் பஜ்ரங் தள் உறுப்பினர் கொலை – வன்முறை, வாகனங்களுக்கு தீ வைப்பு
ஹர்ஷாவின் குடும்பத்தினரை சந்தித்து விட்டு மீன் விற்பனை கூட்டமைப்பின் தலைவர் யஷ்பால் சுவர்ணா செய்தியாளர்களிடம் பேசியுள்ளார். அதில், “ஹர்ஷா இந்து என்பதால்தான் கொல்லப்பட்டார். அவரது குடும்பத்திற்கு நீதி கிடைக்க அனைத்து முயற்சிகளையும் செய்வோம். யார் செய்தார்கள் என்பது எங்களுக்குத் தெரியும், எப்படிச் செய்தார்கள் என்றும் எங்களுக்குத் தெரியும், இதற்கு எப்படி எதிர்வினையாற்ற வேண்டும் என்பதும் எங்களுக்குத் தெரியும் என்று யஷ்பால் சுவர்ணா தெரிவித்துள்ளார்.
“இந்துக்கள் விழித்துக்கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மையின் அரசியல் செயலாளர் ஜீவராஜ் கூறியுள்ளார்.
Source : The Hindu
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.