Aran Sei

அகிலேஷ் தனது பெயரை அகிலேஷ் அலி ஜின்னா என மாற்றிக் கொள்ளட்டும் – உ.பி. துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா

மாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தனது பெயரை அகிலேஷ் அலி ஜின்னா என்று மாற்றிக் கொள்ளட்டும் என்று உத்தரப் பிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா தெரிவித்துள்ளார்.

நேற்று அவர் பத்திரிகையாளர் சந்திப்பில் ”சிறுபான்மையினரைத் திருப்திபடுத்தும் அரசியல் செய்வதற்காக ஜின்னாவைப் பற்றிப் பேசுகிறது சமாஜ்வாதி கட்சி. எனவே அகிலேஷ் யாதவ் தனது பெயரை அகிலேஷ் அலி ஜின்னா என்று மாற்றிக் கொள்ளட்டும். அவரின் கட்சியின் பெயரையும் ஜின்னாவாடிக் கட்சி எனவும் மாற்றிக் கொள்ளட்டும்.

ஜின்னா ஒருபோதும் தேர்தலில் வெல்லமாட்டார். இந்த மாநிலத்தின் மக்கள் பாஜகவைத் தேர்ந்தெடுப்பார்கள். முகமது அலி ஜின்னாவோ அல்லது முக்தர் அன்சாரியோ தேர்தலில் வெல்ல உதவமாட்டார்கள். மக்கள் தாமரைச் சின்னத்தைத்தான் மீண்டும் தேர்வு செய்வார்கள்.

உத்தர பிரதேச மக்களை நேர்மையுடன் அணுகும் கட்சி பாஜக மட்டும்தான். மாஃபியாக்கள், கூலிப்படைகள் ஏராளமாக இருந்த நிலையில் அவற்றை முடிவுக்குக் கொண்டுவந்து அமைதியைக் கொண்டுவந்தது பாஜக அரசுதான்.

நடந்து முடிந்த 3 தேர்தலில் தோல்வி அடைந்ததால் எதிர்க்கட்சிகள் அச்சத்தில் உள்ளன. இந்த முறையும் தோற்றுவிடுவோம் என அச்சப்படுகிறார்கள். ஆனால், எங்களுக்குக் கள நிலவரம் என்னவென்று தெரியும். கிளை மட்டத்திலிருந்து பாஜக வலுவாக இருக்கிறது. இது சமாஜ்வாதி கட்சிக்கும் தெரியும். அவர்களிடம்தான் கூலிப்படைகளும், குண்டர்களும், மாஃபியாக்களும் இருக்கிறார்கள்”. என்று உத்தரப் பிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

 

source : timesnownews

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்