Aran Sei

ஆசியப்போட்டியில் நான்கு முறை தங்கம் வென்ற தடகள வீரர் மில்கா சிங் – கொரோனா தொற்றால் மரணம்

ந்திய தடகள வீரர் மில்கா சிங், நேற்றைய தினம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

‘கும்பமேளாவில் போலியாக செய்யப்பட்ட கொரோனா பரிசோதனைகள்’: உத்தரகண்ட் பாஜக அரசு மக்களைப் காக்கத் தவறிவிட்டதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு

இதுகுறித்து, தெரிவித்துள்ள அவரது குடும்பத்தினர்,நேற்று இரவு 11.30 மணியளவில் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளதாகவும் அந்த செய்தி கூறுகிறது.

கடந்த ஜூன் 13 அன்று மில்கா சிங்கின் மனைவி நிர்மல் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்திருந்தார்.

கடந்த மாதம் மில்கா சிங்கிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும், கடந்த ஜூன் 16 அன்று தொற்றிலிருந்து குணமடைந்து அவசர சிகிச்சை பிரிவிலிருந்து சாதாரண வார்டிற்கு அனுமதிக்கப்பட்டதாகவும் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கும்பமேளாவில் போலியாக கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதாக குற்றச்சாட்டு – விசாரணைக்கு உத்தரவிட்ட ஒன்றிய அமைச்சகம்

மில்கா சிங் நான்கு முறை ஆசிய தடகள போட்டியில் தங்கம் வென்றவர், 1960 ஒலிம்பிக் போட்டியில் நான்காம் இடம் பெற்றவர், மேலும், 1956 மற்றும் 1964 ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் சார்பாக பங்கேற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

1959 ஆம் ஆண்டு இந்திய அரசு அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி சிறப்பித்தது.

 

 

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்