Aran Sei

சட்டத்துறையில் பெண்களின் பங்களிப்பை ஊக்குவிக்க வேண்டும் – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா கருத்து

ட்டத்துறையில் பெண்களின் பங்களிப்பை ஊக்குவிக்க வேண்டும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா தெரிவித்துள்ளார்.

இந்திய பார் கவுன்சில் ஏற்பாடு செய்திருந்த பாராட்டு விழாவில் கலந்து கொண்டு பேசியபோது அவர் இதனை கூறியுள்ளார்.

பெரும்பாலானவர்கள் இந்தத் தொழிலில் போராடுவதால், சட்டத்துறையில் பெண்கள் அதிக அளவில் வரவேற்கபடுவதில்லை என்பதை ஒப்புக் கொண்டார்.

”நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகியிருக்கும் நிலையில், அனைத்து மட்டங்களிலும் 50 விழுக்காடு பெண்களின் பிரதிநிதித்துவம் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், உச்சநீதிமன்ற நீதிபதிகளில் பெண்களுக்கு வெறும் 11 விழுக்காடு பிரதநிதித்துவத்தை மட்டுமே அடைந்துள்ளோம் என்பதை வருத்ததுடன் ஒப்புக் கொள்ள வேண்டும். சில மாநிலங்களில் மட்டும் இட ஒதுக்கீட்டின் காரணமாக பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரித்துள்ளது. ஆனால் உண்மை என்னவென்றால் சட்டத்துறை பெண்களை அவர்களின் நிலைக்கு ஏற்ப வரவேற்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

உரிமைகளுக்கான போர் வீரர்கள் என்று வழக்கறிஞர்களை கூறிய நீதிபதி என்.வி. ரமணா, “நீதியின் ரதத்தில் அவர்கள் ஒரு முக்கியமான சக்கரம்” என குறிப்பிட்டுள்ளார்.

பார் கவுன்சில் குறித்து கருத்து தெரிவித்த நீதிபதி ரமணா, “1960 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த அமைப்பு தொழில்துறைக்குள் நல்வாழ்வையும் நெறிமுறைகளையும் மேம்படுத்துவதற்காக செயல்பட்டு வருகிறது. சட்டக் கல்வியை ஒழுங்குபடுத்துவது முதல் சட்டத் தொழில்வரை, சட்டம்பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவது முதல் சட்ட உதவிகள் வழங்குவது வரை, உண்மையிலேயே இந்திய  பார் கவுன்சில் ஒரு சமூக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிறுவனமாகும்.” என தெரிவித்துள்ளார்.

”இதைக் குறிப்பிட இது சரியான சந்தர்பமாக இருக்காது. இருந்தாலும், நீதித்துறையைச் சேர்ந்த ஒரு அனுபவம் வாய்ந்த நபர் என்ற முறையில், சில கடினமான உண்மைகளை உங்கள் பார்வைக்கு கொண்டு வர வேண்டியது என் கடமை. உள்கட்டமைப்பு பற்றாக்குறை, நிர்வாக பற்றாக்குறை மற்றும் நீதிபதிகள் பற்றாக்குறை போன்ற கடினமான சவால்களை நீதித்துறை எதிர்கொள்கிறது” என தலைமை நீதிபதி என்.வி. ரமணா கூறியுள்ளார்.

Source : NDTV

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்