Aran Sei

வகுப்புவாதத்தை ஏற்படுத்த வரலாற்றைத் திரிக்கும் வலதுசாரிகள் – மதமாற்ற திருமணங்களும் சில விளக்கங்களும்

நான் சோகமாகவும், ஆழ்ந்த கவலையுடனும்இந்தக் கட்டுரையை எழுதுகிறேன். மக்களிடையே பணிபுரிந்து நீண்ட அனுபவம் பெற்ற ஒரு மூத்த அதிகாரியாக, ஒரு பொறுப்புள்ள, அறிவார்ந்த குடிமகனாக, பெரும்பான்மையான மக்களின் கவனத்திலிருந்து தப்பி விடும் சில அச்சுறுத்தும் அடையாளங்களை என்னால் முன்கூட்டியே காண முடிகிறது என நினைக்கிறேன். இது எனக்கு வரவிருக்கும் அழிவைப் பற்றி  மேலும் பயத்தை ஏற்படுத்துகிறது. “எதுவாக இருக்கிறதோ அது அவ்வாறே இருக்கட்டும்” என்று சொல்ல வருமுன் நமது நாட்டில் வகுப்புவாத நல்லிணக்கத்தை பேணிகாக்க ஏதாவது செய்யலாம் என்பதற்காகவே இந்தக் கட்டுரையின் மூலம் நான் எனது கவலைகளை எனது தோழர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

காதல் ஜிகாத் என்ற பூச்சாண்டிக்கு எதிராக கடந்த ஆண்டு ஒரு சட்டத்தை இயற்றியதைத் தொடர்ந்து ஒரு சிறிய சுணக்கத்திற்குப் பின் சமூக ஊடகங்களிலும், பிற இடங்களிலும் அது குறித்து ஒரு திடீர் எழுச்சி ஏற்பட்டுள்ளதை வாசகர்கள் கவனித்திருக்கக்கூடும். அண்மையில் நடந்த பட்டௌடி மகா பஞ்சாயத்திலும் இது பற்றி வெட்கமின்றி பேசப்பட்டது. மிக அதிக அளவிலான புலனச் செய்திகள் சுற்றி வந்து வெறுப்பைத் துப்பின. வெட்கமின்றி பாலியல் வன்முறைக்குத் தூண்டின. மேலும் காதல் ஜிகாத் என்ற பூச்சாண்டியைக் காட்டி குழப்பத்தை விளைவித்தன. அவற்றைப் பொது வெளியில் வைத்தால், நானும் வகுப்புவாத வெறுப்பைத் தூண்டியதாக குற்றச்சாட்டப்படுவேன் என்பதால் அவற்றை நான் பொது வெளியில் வைக்க இயலாது. எனினும், எனது சொற்களையும் பகுப்பாய்வையும் நம்புமாறு நான் வாசகர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

அரண்செய் சிறப்பிதழ் – ஏழு தமிழர் விடுதலை

எனது பகுப்பாய்வு கற்பனையின் வடிவம் அல்ல. நான் இந்தச் செய்திகளை, இதே போன்ற செய்திகளைப் பெறும் பலருடன் விவாதித்துள்ளேன். அவர்கள் தங்கள் மீது இவை ஏற்படுத்தியுள்ள பாதிப்புகளை வெளிப்படையாக ஒப்புக் கொண்டுள்ளனர். இது போன்ற செய்திகளை ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கானவர்களுக்குப் பரப்புகின்ற நபர்களையோ அல்லது அமைப்புகளையோ பெயரிடுவதை நான் தவிர்க்கிறேன். ஏனெனில் அவர்களின் அடையாளங்கள் விசாரணையின்றி நிரூபிக்க முடியாது. அது இப்போது முக்கியமும் அல்ல. ஏனெனில் பெரும்பாலான வாசகர்களுக்கு அவர்களுக்குப் பின்னால் உள்ளவர்கள் யார் என்பது தெரியும். நான் கீழே கூறியுள்ள பல்வேறு காரணங்களுக்காக அந்தச் செய்திகள் அவர்களுடைய இரத்தத்தைக் கொதிக்க வைத்ததாக அவர்கள் ஒப்புக் கொண்டனர்.

2022 உ.பி. தேர்தலில் மூலம் 2024 பொதுத் தேர்தல்வரை நாம் காணப்போகும் அரசியல் ரீதியாக கூடுதல் கவனத்தை ஈர்க்கும் சூழலை உருவாக்குவது என்ற புள்ளியின் பின்னால் அணிதிரள்வதற்கு இந்தக் காதல் ஜிகாத் பூச்சாண்டி மிக உயர்ந்த உணர்ச்சியுடனும், குழப்பமான வகையிலும் வழிவகுக்கும்.

பெட்ரோல் விலையேற்றம் – 3.35 லட்சம் கோடி ரூபாய் வரி வசூல் செய்த ஒன்றிய அரசு

வரலாற்று ரீதியான பழிவாங்கலுக்கு அழைப்பு

முதலாவதாக, இடைக்கால யுகத்தின் கொடூரமான கடந்தகாலத்தின் ஆழ் நினைவுகளில் புதைக்கப்பட்டிருந்த அவர்களுடைய கொடூர நுண்ணுயிரியில் வெறுப்புப் பேய்களை மீண்டும் அது உயிர்ப்பிக்கிறது. இந்த 1309 ஆண்டுகளாக(அதாவது அரபு நாட்டின் உமயத் காலிப்பின் தளபதியான முகம்மது-பின்- காசிம் இந்து அரசான சிந்துவைத் தாக்கிய கி.பி. 712  லிருந்து) நாம்  உண்மையில் சமூக நல்லுறவில் புரளுகிறோம் என்பதல்ல. ஆயினும் கூட,’ கடந்த காலத்தின் அனைத்து உண்மையான மற்றும் கற்பனையான அட்டூழியங்ஙளுக்கு வரலாற்று ரீதியான பழிவாங்கலுக்குக்கான அழைப்பு’ ஒருபோதும் அவ்வளவு கூர்மையாக இருந்ததில்லை.

இந்தப் பழிவாங்களுக்கான அழைப்பு,  இடைக்கால முஸ்லீம் ‘படையெடுப்பாளர்களும்’, ‘குடியேறியவர்களும்’ இந்துக்கள் மீது சொல்லொணா கொடுமைகளைச் செய்ததாகக் கூறுவதற்கான தீவிர முயற்சிக்கு ஊக்கமளிப்பதாகவே உள்ளது. தங்களிடம் இத்தகைய செய்திகளை உருவாக்குவதற்கு வரலாற்று ரீதியான ஆதாரங்கள்  கீழ் மட்ட பாடநூல்களிலும் கூட இல்லை என்பது அவர்களுக்குத் தெரியும்.

‘பெகசிஸ் விவகாரத்தில் நீதி விசாரணை வேண்டும்’ – டெல்லி பாஜக தலைமையகத்திற்கு முன் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

இதனை தவிர்ப்பதற்காக அவர்கள் இந்தியாவின் முழு வரலாறு பற்றிய வரலாற்றாய்வையும்  ஒதுக்கித் தள்ளி விடுகிறார்கள். இதுவரை கல்வித்துறையில் ஆதிக்கம் செலுத்தி வந்த ஆங்கிலேயர்களும்,  ‘இடதுசாரி -சமயசார்பற்ற’ வரலாற்றாளர்களும் குறிப்பிட்ட கட்சியின் அரசியல் நிகழ்ச்சி நிரலாக மேலெடுத்துச் செல்லும் உள் நோக்கத்துடன் அப்போது நடந்த கொடுமைகளை வேண்டுமென்றே மூடி மறைத்து விட்டனர் என்று அவர்கள் கூறுகின்றனர். புலனச் செய்திகளில் உள்ள சில மர்மமான (அல்லது அறியப்படாத) நாட்டுப்புற கதைகளைப் பரப்பி  அவைதான் இந்தியாவின் உண்மையான வரலாறு என நிறுவ முயற்சிக்கிறார்கள். இடைக்காலத்தில் முஸ்லீம்கள் இந்துப் பெண்களிடம் வலுக்கட்டாயமாக கொள்ளையடித்ததாகக் அவர்கள் கூறுகிறார்கள். இந்தப் புனைக்கதையை முன்னிறுத்தி இந்தியாவில் இப்போது வாழும் முஸ்லீம்கள் அவர்களுடைய  நடத்தைகளின் அடிப்படையில் அந்த இடைக்கால முஸ்லீம்கள் இருந்தது போலவே இருக்கிறார்கள் என்று அவர்கள் கூறுகிறார்கள்.

இந்த மூடத்தனத்தில் ஒரு செயல்முறை உள்ளது. வரலாற்றைச் சிதைப்பதன் மூலமும், ஒரு சில முஸ்லீம் ஆட்சியாளர்களின் கொடுர, விபரீதச் செயல்களைப் பற்றி பரப்புவதன் மூலமும், அவர்கள் இன்றைய முஸ்லீம்களை எளிய இலக்காக்கி வருகின்றனர். சில ஆட்சியாளர்கள் கொடுமைகளைச் செய்திருந்தாலும், அன்றைய  முஸ்லீம்களையே அதற்குப் பொறுப்பேற்கச் செய்ய முடியாது என்ற நிலையில், இன்றைய முஸ்லீம்களைப் அதற்குப் பழி சுமத்துவது குறித்து அவர்கள் சிறிதும் கவலைப்படாமல் வாதிடுகின்றனர். மேலும் இப்போது ‘அதிகாரமிக்க இந்து- மனநிலை அரசு’ பதவியில் இருப்பதால், முஸ்லீம்கள் இந்துக்கள் மீது வலிமையைப் பயன்படுத்த முடியாது என்பதால் ‘காதல் ஜிகாத்’ மூலம் கவர்ந்திழுத்து, முந்தைய அதே செயல்களைத் தொடர்வதாகவும் அவர்கள் கூறி வருகின்றனர்.

‘உளவு பார்க்க வெளிநாட்டு நிறுவனத்தின் ஸ்பைவேர் உபயோகிப்பது தேசத்துரோகம் இல்லையா?’ – காங்கிரஸ் கேள்வி

இந்து ஆண்மைக்குச் சவாலாக ‘காதல் ஜிகாத்’

இந்தக் கூறு ‘காதல் ஜிகாத்தை’  ஒரு வகை’ பாலியல் திருட்டாக’ முன்னிறுத்துவதன் மூலம், இந்து ஆண்மைக்கு நேரடியான அவமதிப்பதாகவும், சவாலாகவும் காட்டுகிறது.

முதலாவதாக, இரத்தக்கறை தோய்ந்த கலப்புத் திருமணத்தில் ஈடுபடும் பெண்களின் அவல நிலையைப் பற்றி அவர்கள் கூறுகையில், அவர்களை தங்கள் குடும்பத்தில் சேர்த்துக் கொண்டவுடன், தங்களுடைய பல மனைவியருள் ஒருவராக்கி, அவர்களை வெறும் குழந்தைகளைப் பெறும் கருவியாக மாற்றி விடுவார்கள். இதன்மூலம்  தங்கள் மக்கள் தொகையைப் பெருக்கிக் கொள்வது அவர்கள் நோக்கம் என்று அபத்தமாக கூறுகின்றனர்.

வரலாற்று ரீதியாக, இந்திய ஆணாதிக்க சமுதாய அமைப்பு பெண்களை குடும்பம் அல்லது ஒரு மதத்தைச் சார்ந்தவர்களின் மானத்தின்  இறுதி அடையாளமாக கருதுகிறது. பெண்களை ஏதாவது ஒரு வகையில்  ‘ வலுக்கட்டாயத்தினாலோ அல்லது அதிகாரத்தினாலோ ‘ மற்றவர்களிடம்’ இழப்பது அல்லது அவர்களை ‘அவமானத்திற்குள்ளாக்குவது’ என்பது ஆண்களின் உச்சக்கட்ட அவமானமாக கருதுகிறது. இது ஆண்களின் இயலாமையின் சான்றாகும்.  இதனால், மிகத் துல்லியமாக இந்த ‘ஆதிக்க வலியுறுத்தல் பாலியல் கொடுமைகள்’ எதிரிகளில் உள்ள‌ ஆண்களைக் குறி வைத்து அவமதிக்கும் குறித்த காலத்திற்கு ஏற்றத் தந்திரமாகும்.

இந்தியப் பண்பாட்டு பரிணாம ஆய்வுக் குழுவில் தென்னிந்தியர்களுக்கும் இடம் – சு.வெங்கடேசனின் கோரிக்கையை ஏற்ற ஒன்றிய அரசு

திரௌபதியை துகிலுரித்தது இதற்கு ஒரு எடுத்துக்காட்டு ஆகும். கவுரவர்களுக்கு திரவுபதியை துகிலுரித்து  பார்க்கும் ஆசையை விட அவளது வலிமை மிக்க கணவர்களை அவமானப்படுத்துவதே  நோக்கமாகும். திரௌபதியை அடைய வேண்டும் என்று கருதியிருந்தால் அவளைத் தங்கள் அரண்மனைக்குத் தூக்கிச் சென்று அவளை அப்பட்டமான பாலியல் அடிமையாக வைத்திருந்திருக்கலாம். அவளை துகிலுரிப்பதன்  மூலம் பாண்டவர்களுக்கு விடுக்கும் செய்தி தெளிவாக காட்டப்படுகிறது. அவளுடைய மானத்தைக் காப்பாற்ற வேண்டியது பாண்டவர்களின் கடமை. அதில் அவர்கள் தோல்வி அடைந்து விட்டார்கள். எனவே, மிகப் பெரிய போர் வீரர்களாக இருந்த போதும் அவர்களுக்குத் தங்கள் ஆண்மை மற்றும் வலிமை குறித்த எந்தப் பெருமையும் இல்லை. இந்துக்களின் ஆண்மை குறித்து மறைக்கப்பட்ட, வெளிப்படுத்தப்படாத அச்சங்களுக்கு விடுக்கப்படும் செய்தி இது என்பது வெளிப்படை.

இந்து ஆண்களின் பாலால் விருப்பத்தைக் கேலி செய்வது

இந்தக் கருப்பொருளை விரிவுபடுத்தி, இந்து ஆண்களின் சுயமரியாதையை கேவலப்படுத்துவதாக இந்தச் செய்திகள் உள்ளன. இதற்கு எதிராக நீங்கள் கிளர்ந்தெழவில்லை என்றால் நீங்கள் ஆண்களே அல்ல, மேலும் இது உங்களையே நீங்கள் கேவலப்படுத்திக் கொள்வதாகும்‌. இது ஒரு வகையில் மிகவும் உணர்வுபூர்வமானது. இதனைக் கண்டு ஆத்திரப்படாதவன் இந்துவா என ஐயப்படும் அளவிற்கு இந்த வேண்டுகோள் மனதை வசியப்படுத்துவதாகும்.

இது மட்டுமல்ல, இந்தச் செய்திகள், இந்து ஆண்களின் கேள்விக்குரிய பாலியல் விருப்பத்தை அவர்களின் பெண்கள் உணர்ந்தபடி மறைமுகமாக கேவலப்படுத்துகின்றன. உங்களிடம் இல்லாதது என்ன?, எது உங்கள் பெண்களை பிற சமூக ஆண்களிடம் செல்ல வைக்கிறது? என்று கேட்காமல் கேட்கிறது. இந்த இரண்டு அவதூறுகளால், ஆத்திரமடையும் மக்கள், மனக் கொதிப்பிலும், தாழ்வு மனப்பான்மையிலும் இருப்பவர்கள் எந்த ஒரு வகுப்புவாத வன்முறை நிகழ்வின் போதும், அதிக கொடூரமான, வக்கிரமான செயல்களிலும் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

‘பாடத்திட்டத்தில் குறிப்பிட்ட சித்தாந்தத்தைப் புகுத்தக்கூடாது’ – நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு ரோமிலா தாப்பர் உள்ளிட்ட வரலாற்று ஆய்வாளர்கள் கடிதம்

இது போன்ற செய்திகளும், இஸ்லாமியர்கள் தரப்பிலிருந்து வந்ததாகக் கூறப்படும் பல செய்திகளும் ஒரே மாதிரியான புலனக் குழுக்களில் சுற்றி வருகின்றன. அவைகள் இந்துக்களிடமிருந்து பெண்களை எடுத்துச் செல்லவும், தங்ரகள் ஆண்களைக் கைவிடவும் அழைப்பு விடுப்பதாக இருப்பதால் அவர்கள் இலக்கு வெளிப்மடையானது.  புலனாய்வு செய்யாமல் இந்தச் செய்திகளின் தோற்றம் குறித்து கருத்துக் கூற முடியாது தான். எனினும், இந்தச் செய்திகள் யாவும் ஒரே வகையான புலனக் குழுக்களில் சுற்றி வருவது கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று.

ஒன்றிய அரசின் சட்டங்களும் – நிலைமை மாறாத ஜம்மு காஷ்மீரும்

குப்பியிலிருந்து அவர்கள் வெளியேற்றும் பூதம் என்னவென்று அவர்களுக்குத் தெரியவில்லை

 இந்தியாவில் நடைபெறும் மத மறுப்புத் திருமணங்களின் எண்ணிக்கை மிகக் கேவலமாக வெறும் 0.36% தான் என்பது இத்தகைய வெறுப்பைத் தூண்டுபவர்களுக்குத் தெரியவில்லை. இதுபற்றி யாரும் வாயைக் கூடத் திறப்பதில்லை. ‘காதல் ஜிகாத் ‘ என்ற ஒன்று இருப்பதாக அரசு ஒப்புக் கொள்ளக்கூட இல்லை. உச்சநீதிமன்றமும், உயர்நீதிமன்றங்களும்  வயது வந்தவர்கள் தங்கள் மதத்திற்குள்களோ அல்லது வெளியிலோ எங்கு வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ளலாம் என பல முறை கூறியுள்ளன. இத்தகைய செய்திகளைச் சுற்றுக்கு மறு சுற்றுக்கு விடுவது எளிதில் பாதிக்கப்படக்கூடிய மக்களின் மனதில் ஆழ்ந்த வடுக்களை ஏற்படுத்தி விடுகிறது.

கண்காணிப்பின் அரசியல் – அமேசானும் தொழிலாளர் பிரச்சினையும்

இறுதியில், இது இந்திய சமூகத்தை நிரந்தரமாக பிளவுபடுத்தும் என்பதுடன்  முநாடும் அதன் அழியாத் தன்மைக்காக வருந்தும்.

கடவுளின் பொருட்டாவது, காதல் ஜிகாத் பூச்சாண்டியால் வகுப்புவாத நல்லிணக்கத்தை சீரழிப்பதை நிறுத்துங்கள்.

www. the wire.in இணையதளத்தில் வெளியான கட்டுரையின் மொழியாக்கம்

எழுதியவர்: Dr. என் சி. அஸ்தானா

ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ் அதிகாரி, எழுத்தாளர்

 

 

 

    

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்