Aran Sei

‘திரிபுராவில் இந்துத்துவவாதிகளால் தாக்கப்படும் இடதுசாரிகள், இஸ்லாமியர்கள்’ – நடவடிக்கை எடுக்கக் கோரி போராட்டம் அறிவித்த திருமாவளவன்

திரிபுராவில் இடதுசாரிகள், இஸ்லாமியர்கள் மேல் நிகழ்த்தப்படும் தாக்குதலைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

இதுகுறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், திரிபுரா மாநிலத்தில் இடதுசாரிகள் மற்றும் இசுலாமியர்கள் மீது கொடூர வன்முறை தாக்குதல்கள் நடந்து வருகின்றன. வன்முறையை தடுப்பதற்கு அங்குள்ள பாஜக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக, பாதிக்கப்பட்ட இடதுசாரிகள் மற்றும் இசுலாமியர்களுக்காக குரல் கொடுப்பவர்கள் மீது வழக்குகளைப் பதிவுசெய்து அடக்குமுறை செய்கிறது.

விவசாயிகளை தாக்கியதாக பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் மீது குற்றச்சாட்டு – கைது செய்யக் கோரி விவசாயிகள் போராட்டம்

அண்மையில் அகர்தலாவில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகம் சூறையாடப்பட்டது. அக்கட்சியின் மாவட்ட மற்றும் வட்டாரக் குழு அலுவலகங்களும் தீ வைத்து கொளுத்தப்பட்டன.

தேசர்கதா நாளிதழ் அலுவலகமும், 24 நியூஸ் சமூக ஊடக அலுவலகமும் தாக்கப்பட்டதோடு, திரிபுரா மக்களின் தலைவரான தசரத் தேவ் அவர்களின் சிலையும் உடைக்கப்பட்டது.

ஆளும் பாஜக அரசின் துணையோடு நடத்தப்பட்ட இந்த தாக்குதல்களால் ஊக்கம் பெற்ற பாஜக சங்பரிவார் கும்பல், கடந்த சில வாரங்களாக அங்குள்ள இசுலாமியர்களையும் குறிவைத்து தாக்கிக் கொண்டிருக்கிறது.

அரசியலோ அரசியல் – காமராசர் முதலமைச்சரான கதை

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 16 பள்ளிவாசல்கள் எரிக்கப்பட்டுள்ளன. இசுலாமியர்களின் வீடுகள் தகர்க்கப்பட்டுள்ளன. இறைத்தூதர் நபிகள் நாயகம் அவர்களை இழிவு படுத்தும் வகையில் கொச்சையான முழக்கங்களை எழுப்பி பாஜக கும்பல் அங்கு ஊர்வலம் நடத்துகின்றனர். இசுலாமியர்களை குறிவைத்து 27 வன்முறைச் சம்பவங்கள் நடந்த பிறகும், எவ்வித நடவடிக்கையும் இல்லை.

இதற்கிடையில், திரிபுரா வன்முறைகள் குறித்து பி.யூ.சி.எல் என்னும் மனித உரிமை அமைப்பின் சார்பில் உண்மை அறியும் குழு அமைக்கப்பட்டு, அங்கு நடந்த வெறியாட்டங்களை அம்பலப்படுத்தியதற்காக மனித உரிமை ஆர்வலர்கள் மீது ஊபா சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நீதி கேட்டு போராடும் திரிபுரா இசுலாமிய மக்களின் போராட்டத்திற்கும் தடை போடப்பட்டுள்ளது.

‘எல்பிஜி சிலிண்டர் விலையையும் குறைக்க வேண்டும்’- ஒன்றிய அரசிற்கு மேனகா காந்தி கோரிக்கை

திரிபுராவில் அரங்கேறி வரும் இத்தகைய பாசிச வெறிப் போக்கை கண்டித்தும், பாஜக சங்பரிவார் குண்டர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரியும், வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கேட்டும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில், நவம்பர் 9 அன்று மாலை 3 மணிக்கு, சென்னையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்