Aran Sei

“ஒரு நபர் கட்சி மாறுவதால் இடதுசாரிகள் வலுவிழக்க மாட்டார்கள்” – கண்ணையா குமார் காங்கிரஸில் இணைந்தது குறித்து மாணவர் சங்க முன்னாள் தலைவர் கருத்து

Credits : The Indian Express

”காங்கிரசில் இணைவது குறுக்கு வழி போன்று தோன்றலாம், ஆனால் அவர் கொண்டிருக்கும் சித்தாந்தம் அங்கு நீர்த்து போய்விடும்” என்று கண்ணையா குமார் காங்கிரசில் இணைந்ததை இடதுசாரி மாணவர் செயற்பட்டாளர் ஒருவர் விமர்சித்துள்ளார்.

அண்மையில், ஜவஹர்லால் நேரு பல்கலை கழகத்தின் (ஜேஎன்யு) மாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினருமான கண்ணையா குமார் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி முன்னிலையில், காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பிபராக தன்னை இணைத்துக் கொண்டார். கடந்த 2019 ஆம் ஆண்டு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்ட கண்ணையா குமார், அவ்வாண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், பீகாரின் பெகுசராய் தொகுதியில் இருந்து, பாஜக வேட்பாளர் கிரிராஜ் சிங்கை எதிர்த்துப் போட்டியிட்டார். அந்தத் தேர்தலில் அவர் தோல்வி அடைந்தாலும், 22% வாக்குகளைப் பெற்று, இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.

இந்நிலையில், கண்ணையா குமார் காங்கிரஸ் கட்சியில் இணைந்தது தொடர்பாக, தி வயர் இணையதளத்திடம் பேசிய, ஜேஎன்யு மாணவர் சங்கத்தின் தற்போதைய துணை தலைவர், சாகேத் மூன், “கண்ணையா குமார் காங்கிரசில் இணைந்திருப்பது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. நான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அடிப்படை உறுப்பினராக கூட இல்லாத போதிலும், கண்ணையா குமாருக்காக பீகார் சென்று, பெகுசராய் தொகுதியில் பிரச்சாரம் செய்தேன். அதற்கு காரணம், அவர் வலுவான இடதுசாரி கருத்துக்களின் பிரதிநிதியாக இருந்ததால் தான்” என்று குறிப்பிட்டுள்ளார்.

“இதற்கு முன்னர் ஜேஎன்யுவின் மாணவர் தலைவராக இருந்த பலர் காங்கிரசில் இணைந்துள்ளனர். ஆனால் அவர்கள் காங்கிரசில் இருக்கும் அதிகார கட்டமைப்பிற்குள் தங்களை நிலைநிறுத்திக் கொள்வதை மட்டும் தான் செய்துள்ளனர். காங்கிரசில் இணைவது குறுக்கு வழி போன்று தோன்றலாம், ஆனால் காங்கிரசில் அவர் கொண்டிருக்கும் சித்தாந்தம் நீர்த்து போய்விடும்” என்று தெரிவித்துள்ளார்.

ஜே.என்.யூ மாணவர் தலைவர் உமர் காலித் மீதான வழக்குகள் புனையப்பட்டவை – வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வாதம்

ஜேஎன்யுவின் முன்னாள் மாணவர் சங்க தலைவரான (2018-19) சாய் பாலாஜி, ”இடதுசாரிகளின் முகமே ஒரு சிலர் தான் என்பது போன்று ஊடகங்கள் சித்தரிப்பது தவறானது. பல சவால்களைத் தாண்டி இடதுசாரிகள் வளர்ந்துள்ளனர், ஒரு நபர் கட்சி மாறுவதால் இடதுசாரிகள் வலுவிழக்க மாட்டார்கள்” என்று தெரிவித்துள்ளதாக தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

தலித் செயல்பாட்டாளர் படுகொலை: குற்றவாளிகளை காப்பாற்றும் குஜராத் அரசு – ஜிக்னேஷ் மேவானி குற்றச்சாட்டு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பான, அனைத்து இந்திய மாணவர் பெருமன்றம், “மாணவர் அரசியலில் முழு வேகத்துடன் செயல்பட்டு பின்னர் மைய நீரோட்ட அரசியலில் இருக்கும் முக்கியமான கட்சியில் இணைவது, அவருடைய அரசியல் வாழ்க்கைக்கு ஆரோக்கியமானது என அவர் விரும்பினால், அது அவரின் தனிப்பட்ட முடிவு, அதை அவர் நிச்சயம் செய்ய வேண்டும்” என்று தி வயரில் வெளியான செய்தி கூறுகிறது. அனைத்து இந்திய மாணவர் பெருமன்றத்தில், கண்ணையா குமார் மூன்று ஆண்டுகள் செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.

தலித்கள் மீதான பிரம்படி தாக்குதலை எதிர்த்த பேரணி : ஜிக்னேஷ் மேவானி உட்பட 10 பேர் மீது நீதிமன்றம் குற்றச்சாட்டுகளை பதிவு செய்தது

ராகுல் காந்தியை கண்ணையா குமார் சந்திப்பின்போது, குஜராத் வத்கம் தொகுதியின் சுயேட்சை சட்டமன்ற உறுப்பினரும், தலித் செயற்பாட்டாளருமான ஜிக்னேஷ் மேவானியும் உடனிருந்தது குறிப்பிடத்தக்கது. ஜிக்னேஷ் மேவானி சுயேட்சையாக இருப்பதால் காங்கிரஸ் கட்சிக்கு வெளியில் இருந்தது ஆதரவு தருவதாக குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் இருக்கும் முக்கிய இளம் தலைவர்கள் காங்கிரசில் இணைந்திருப்பது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்