Aran Sei

‘பெகசிஸ் விவகாரத்தில் பல நாடுகள் விசாரணைக்கு உத்தரவிட்ட பிறகும் ஒன்றிய அரசு மட்டும் மௌனம் காப்பதேன்?’ – மல்லிகார்ஜுன கார்கே கேள்வி

மாநிலங்களவை விதி 267-ன் படி, கடந்த காலங்களில் விவாதங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன என்றும் பல நாடுகள் விசாரணைக்கு உத்தரவிட்ட பிறகும் பெகசிஸ் விவாதத்தில் ஒன்றிய அரசு விவாதத்திற்கு அனுமதியளிக்காமல் ஏன் மௌனம் காக்கிறது என்று மாநிலங்களை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்பியுள்ளார்.

பெகசிஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் குறித்து நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் விவாதம் நடத்த இரு அவைகளிலும் எதிர்கட்சிகள்  கோரி வருகின்றனர்.

நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 4), மாநிலங்களவை எதிர்க்கட்சிகள் விவாதம் கோரி அமளியில் ஈடுபட்டுள்ளனர்.  திரிணாமூல் காங்கிரஸ்  கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் பதாகைகளை ஏந்தியவாறு அவையின் மையப்பகுதிக்கு வந்து முழக்கமிட்டுள்ளனர்.

இதனையடுத்து,  திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஆறு உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்ய அவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு உத்தரவிட்டுள்ளார். டோலோ சென், நாடிமுல் ஹக், அபிர் ரஞ்சன் பிஸ்வாஸ், சாந்தா செஹத்ரி, அர்பிதா கோஷ், மவுஸும் நூர் ஆகிய ஆறு  திரிணாமூல் காங்கிரஸ் உறுப்பினர்களும் ஒருநாள் அவை நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை.

இந்நிலையில், நேற்று (ஆகஸ்ட் 5), செய்தியாளர்களை சந்தித்து பேசிய மல்லிகார்ஜுன கார்கே, “பாஜகவுக்கு சகிப்புத்தன்மை இல்லை. ஆறு  திரிணாமூல் காங்கிரஸ் உறுப்பினர்களின் இடைநீக்கம் தவறு. அவர்கள் எந்த தவறும் செய்யவில்லை. பதாகைகள் இதற்கு முன்பும் பயன்படுத்தப்பட்டன. எங்களை குறிவைத்து, அச்சுறுத்தி, பயமொருத்தி எங்களுடைய பிரச்சினைகளை நசுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டால், காங்கிரஸும் ஒன்றிணைந்துள்ள எதிர்க்கட்சிகளும் அதற்கு அசையாது தொடர்ந்து போராடும்.” என்று தெரிவித்துள்ளார்.

“இரு அவைகளிலும் இடையூறுகள் ஏற்படுவதாக எதிர்க்கட்சிகளை ஒன்றிய அரசு குற்றம் சாட்டுகிறது. ஆனால், அவர்கள்தான் பிரச்சனைகள் குறித்தான விவாதத்திற்கு தயாராக இல்லை. நாங்கள் இப்போதே விவாதிக்கத் தயாராக இருக்கிறோம். முதலில் நாடாளுமன்றத்தில் விவாதத்தைத் தொடங்குவோம். ஆனால், ஒன்றிய அரசு விவாதம் தொடர்பாக இன்னும் எதிர்க்கட்சிகளை அணுகவில்லை. அதுதொடர்பாக, எந்த நோட்டீஸும் அனுப்பப்படவில்லை.” என்று அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மாநிலங்களவை விதி 267-ன் படி, விவாதங்கள் அனுமதிக்கப்பட்ட கடந்த கால நிகழ்வுகளை மேற்கோள் காட்டி, பல நாடுகள் விசாரணைக்கு உத்தரவிட்டபோது பெகசிஸ் விவாதத்தில் ஒன்றிய அரசு ஏன் மௌனம் காக்கிறது என்று மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்பியுள்ளார்.

“யார் விவாதத்திற்கு அழைத்தார்கள்? மாநிலங்களவை தலைவர் யாரையாவது அழைத்தாரா? விவசாயிகளின் பிரச்சினைகள், பணவீக்கம் மற்றும் மக்கள் பிரச்சினைகள் குறித்து எதிர்க்கட்சிகள் பேச விரும்பவில்லை என்று ஒன்றிய அரசு பொய் கூறுகிறது. இதற்கு முன்பே பல விவாதங்கள் நாடாளுமன்றத்தில் நடந்துள்ளன. ஆனால், பெகசிஸ் ஒட்டுக்கேட்பு மீதான விவாதத்தை மட்டும் ஒன்றிய அரசு அனுமதிக்கவில்லை.” என்று அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Source; newindianexpress

தொடர்புடைய பதிவுகள் :

அரண்செய் சிறப்பிதழ் – பெகசிஸ் எனும் உளவுக்குதிரை

’நாடாளுமன்ற விதிப்படி பெகசிஸ் குறித்து விவாதிக்க அனுமதிக்காத ஒன்றிய அரசு – மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு

பெகசிஸ் விவகாரத்தில் உண்மை வெளிவர வேண்டும்; பாதிக்கப்பட்டவர்கள் ஏன் கிரிமினல் நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை – உச்சநீதிமன்றம் கேள்வி

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்