Aran Sei

கேரளத்தில் மீண்டும் ஆட்சி அமைக்கவிருக்கும் இடது ஜனநாயக முன்னணி – முதல்முறையாக தொடர்ந்து இருமுறை வெற்றி பெற்று சாதனை

credits : indian express

மிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய சட்டமன்றகளுக்கான தேர்தல் மார்ச் 27 ஆம் தேதி முதல் ஏப்ரல் 29 ஆம் தேதிவரை நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணியானது இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இதில் கேரள சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 140 தொகுதிகளில், ஆளும் இடது ஜனநாயக  முன்னணி (எல்.டி.எஃப்) 91 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.  காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி 45 இடங்களிலும், பாஜக 3 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது.

‘மக்கள் நம்பிக்கையோடு எதிர்நோக்கும் நல்லாட்சியை ஸ்டாலின் வழங்குவார்’ – ஸ்டாலினை சந்தித்து வாழ்த்திய கவிஞர் வைரமுத்து

கேரளாவில் ஆட்சியைமைக்க 71 இடங்கள் பெற வேண்டும் என்ற நிலையில், ஆளும் இடது முன்னணி 91 இடங்களில் முன்னிலை வகிப்பதால், மீண்டும் அதே கூட்டணி ஆட்சி ஆமைக்க அதிக வாய்ப்புகள் உள்ளன.

‘தவறான அரசியலும் தவறான ஆட்சியும்தான் மருத்துவரின் உயிரிழப்புக்கு காரணம்’ – இந்திய மருத்துவர் சங்கத்தின் முன்னாள் தலைவர் கருத்து

இந்தத் தேர்தலிலும் வெற்றி பெற்ற தொடந்து இடது முன்னணியே ஆட்சியமைக்குமானால், 65 ஆண்டு கால கேரளா வரலாற்றில் முதல் முறையாக ஒரே கட்சி தொடர்ந்து இரண்டு தேர்தல்களை வென்று ஆட்சி அமைப்பது இதுவே முதல் முறையாகும்.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்