Aran Sei

தாலிபான்களோடு ஆர்எஸ்எஸ்சை ஒப்பிட்ட கவிஞர் ஜாவேத் அக்தர் : மன்னிப்பு கேட்கக் கோரி நோட்டீஸ் அனுப்பிய வழக்கறிஞர்

ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்திற்கு (ஆர்எஸ்எஸ்) எதிராக பொய்யான மற்றும் அவதூறான கருத்துகளுக்கு மன்னிப்பு கேட்கக் கோரி பாடலாசிரியரும் பத்மபூஷன் விருது பெற்றவருமான கவிஞர் ஜாவேத் அக்தருக்கு மும்பையைச் சேர்ந்த வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 3 அன்று தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஜாவேத்  அக்தர் , “ஆர்எஸ்எஸ், விஎச்பி, பஜ்ரங் தளம் போன்ற அமைப்புகளை ஆதரிக்கும் மக்கள் தங்களை சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று நான் நினைக்கிறேன். நிச்சயமாக, தலிபான்கள் கண்டிக்கத்தக்கவர்கள் . காட்டுமிராண்டிகள். ஆனால் நீங்கள் ஆதரிப்பவர்கள், அவர்களிடமிருந்து (தலிபான்கள்) எவ்வகையில் வேறுபட்டிருக்கிறார்கள்” என்று குறிப்பிட்டிருந்தார்.

தாலிபான்களோடு ஆர்எஸ்எஸ்சை ஒப்பிட்ட கவிஞர் ஜாவேத் அக்தர் – சிவசேனா கண்டனம்

மேலும், ஆர்எஸ்எஸ்-சின் பெயரைக் குறிப்பிடமல், “தாலிபான்கள் இஸ்லாமிய நாட்டை அமைக்க விரும்புகின்றனர். இவர்கள் இந்து ராஷ்ட்ரம் அமைக்க விரும்புகின்றனர்” என்றும் ஜாவேத்  அக்தர்  கூறியிருந்தார்.

இந்நிலையில், நேற்று (செப்டம்பர் 22), வழக்கறிஞர் சந்தோஷ் துபே அனுப்பியுள்ள நோட்டீஸில், நோட்டீஸ் கிடைக்கப்பெற்றதில் இருந்து ஏழு நாட்களுக்குள், தன்னுடைய கருத்துகளுக்கு அக்தரிடம் இருந்து நிபந்தனையற்ற எழுத்துப்பூர்வ மன்னிப்பும், அக்கருத்துகளை திரும்பப்பெறவும் வேண்டும் என்றும் அவ்வாறு செய்யத்தவறினால், 100 கோடி ரூபாய் இழப்பீடு கோரி கிரிமினல் வழக்கு தொடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஆர்எஸ்எஸ் தலைவர்களின் வரலாற்றைப் பாடமாக்கிய பல்கலைக்கழகம் – பாடத்திட்டத்தை ஆய்வு செய்ய உத்தரவிட்ட கேரள அரசு

இக்கருத்துகள் அடிப்படையாகக் கொண்டு, அக்தர்மீது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 499 (அவதூறு) மற்றும் 500 (அவதூறுக்கான தண்டனை) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்ய முடியும் என்று நோட்டீஸில் வழக்கறிஞர் சந்தோஷ் துபே குறிப்பிட்டுள்ளார்.

Source: PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்