Aran Sei

‘லவ் ஜிகாத்-ல்’ ஈடுபட்டால் 5 ஆண்டுகள் சிறை – மத்தியப் பிரதேசம்

Image Credits: New Indian Express

‘லவ் ஜிகாத்-ல்’ ஈடுபட்டால் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்குவதற்கான சட்டத்தைக் கொண்டுவர பாஜக அரசு திட்டமிட்டுள்ளது என்று மத்திய பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

“லவ் ஜிகாத்” திற்கு எதிராகச் சட்டம் இயற்ற முடியாது : உ.பி., சட்டக் குழு தலைவர்

இஸ்லாமிய இளைஞர், இந்துப் பெண்ணைத் திருமணம் செய்துகொள்வதற்கு உள்நோக்கம் கற்பிக்கும் இந்துத்துவ வலது சாரிகள் அதை ‘லவ் ஜிகாத்’ என்று அழைக்கிறார்கள்.

செய்தியாளர்களிடம் பேசிய நரோட்டம், ‘மத்திய பிரதேச மத சுதந்திர மசோதா, 2020-ஐ’ அடுத்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் அரசு அறிமுகப்படுத்தும் என்று கூறியுள்ளார். இதன் வழியாக, திருமணத்திற்காக மதமாற்றம் செய்ய துண்டினாலோ, மயக்கினாலோ, மோசடியில் ஈடுபட்டாலோ, அச்சுறுத்தினாலோ ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையை வழங்குவதற்கான சட்டத்தைக் கொண்டுவர நாங்கள் திட்டமிட்டுள்ளோம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்கள் பிணையில் வெளியே வர முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். “இதேபோல், மயக்கி, மோசடி செய்து, அச்சுறுத்தி இவற்றின் அடிப்படையில் செய்யப்படும் மத மாற்றத் திருமணங்களை நிராகரிப்பதற்கும் நாங்கள் ஒரு ஏற்பாட்டைச் செய்கிறோம்” எனவும் நரோட்டம் கூறியுள்ளார்.

மசோதாவின்படி, குற்றத்துக்குத் துணைபோகிறவர்கள் பிரதான குற்றவாளிகளைப் போலவே கருதப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். “நடவடிக்கை எடுப்பதற்கு, மத மற்றம் செய்யப்பட்டவர்கள், அவர்களின் பெற்றோர் அல்லது உடன்பிறந்தவர்கள் புகார் அளிக்க வேண்டியது அவசியம்” என்று நரோட்டம் குறிப்பிட்டுள்ளார்.

“திருமணங்களுக்காக மத மாற்றங்களில் ஈடுபடுபவர்கள், குறைந்தது ஒரு மாதத்திற்கு முன் அது குறித்து மாவட்ட நீதிபதிகளுக்குத் தகவல் அளிக்க வேண்டும். தகவல் அளிக்கும்போது, மத மாற்றத்தை ஏற்பாடு செய்பவர்களும் உடனிருக்க வேண்டும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

லவ் ஜிகாத்தைத் தடுக்க வேண்டும் : கர்நாடக முதல்வர் எடியூரப்பா

இதே போன்ற, திட்டங்களைப் பாஜக ஆளும் உத்தரபிரதேசம், கர்நாடகா மற்றும் ஹரியானா அரசுகள் வெளியிட்டபின்னர் மத்திய பிரதேச அரசின் இந்த அறிவிப்பு வந்துள்ளது. அண்மையில், அலகாபாத் உயர் நீதிமன்றமும் திருமண நோக்கத்திற்காக மட்டுமே மதம் மாறுவதை நிராகரித்தது.

ஹரியானாவிலும் “லவ் ஜிகாத்”துக்கு எதிராகச் சட்டம் – தொடரும் வெறுப்பு அரசியல்

230 இடங்களை கொண்ட மத்திய பிரதேச சட்டசபையில் பாஜகவுக்கு 126 இடங்களும், காங்கிரசுக்கு 96 இடங்களும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்