Aran Sei

பாஜகவை தோற்கடிக்க தீவிரமான பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும் – ராகுல் காந்தி

கோவாவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில்  பாஜகவை தோற்கடிக்கும் வகையில் தீவிரமான பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டுமென காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடந்த கூட்டத்தில் மேலிடப் பொறுப்பாளர் குண்டு ராவ்வுடன் பங்கேற்ற ராகுல் காந்தி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்தக் கூட்டத்தில் பேசிய  குண்டு ராவ்,”கோவா மக்களின் உணர்வுகளை மதிக்கும் வகையிலும், கோரிக்கைகளைப் பூர்த்தி செய்யும் வகையிலும் கோவா மாநில காங்கிரஸ் செயல்படவேண்டுமென எங்கள் தலைவர் ராகுல் விரும்புகிறார்”  என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நடக்கவிருக்கும் தேர்தலில் நாங்கள் உறுதியாகப் பாஜகவைத்  தோற்கடிப்போம் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்தக்கூட்டத்தில்  ப.சிதம்பரம், கே சி வேணுகோபால், ஜிபிசிசி தலைவர் கிரீஷ் சோடங்கர் மற்றும் காங்கிரஸ் சட்டமன்ற கட்சி (சிஎல்பி) தலைவர் திகம்பர் காமட் ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

SOURCE: THE NEW INDIAN EXPRESS

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்