Aran Sei

சிரித்துக் கொண்டே சொல்வது வன்முறை கருத்தாகாது – டெல்லி உயர்நீதிமன்றம் கருத்து

Image Credits: India TV News

சிரித்துக் கொண்டே சொல்லும் கருத்து வன்முறைக் கருத்து அல்ல என்றும் அந்த கருத்தை குற்றமாக பார்க்க முடியாது என்றும் டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

2020 ஆண்டு குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது வடகிழக்கு டெல்லியில் கலவரம் ஏற்பட்டது. இந்நிலையில் கலவரம் தொடர்பாக   ஒன்றிய அரசின் அமைச்சர் அனுராக் தாக்கூர் மற்றும் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் பிரவேஷ் வர்மா கருத்து தெரிவித்திருந்தனர்.

அவர்கள்மீது வழக்கு பதிவு செய்யக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பிருந்தா காரத், டெல்லி கலவர வழக்கை விசாரித்து வந்த நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதனை எதிர்த்து அவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த நீதிபதி சந்திர தாரி சிங், ”அமைச்சர் அனுராக் தாக்கூர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பிரவேஷ் வர்மா பேசியதில் என்ன வகுப்புவாதம் உள்ளது” என கேள்வி எழுப்பியுள்ளார்.

யே லோக் (இவர்கள்) யாரை குறிக்கிறது? யே லோக் என்பது குறிப்பிட்ட சமூகத்தைக் குறிக்கிறது என்பதை நீங்களே எவ்வாறு முடிவு செய்தீர்கள்? அது எந்த ஒரு குறிப்பிட்ட சமூகத்தைக் குறிக்கவில்லை. அவர்கள் யாராக வேண்டுமாலும் இருக்கலாம். நேரடி தூண்டுதல் இதில் இல்லை?” என நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அது ஒரு தேர்தல் உரையா அல்லது சாதாரண நேரத்தில் ஆற்றப்பட்ட உரையா? தேர்தலின்போது ஏதாவது பேச்சு பேசினால் அது வேறு விஷயம். நீங்கள் சாதாரண போக்கில் பேசுகிறீர்கள் என்றால், அது எதையாவது தூண்டினால் குற்றம். நீங்கள் புன்னகையுடன் எதையாவது சொன்னால் குற்றமில்லை, புண்படுத்தும் வகையில் ஏதாவது சொன்னால், குற்றமாகும்” என்று நீதிபதி சந்திர தாரி சிங் கூறியுள்ளார்.

இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டுளார்.

Source: The Wire

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்