ஹரியானாவின் கர்னால் மாவட்டத்தில் பேரணிகள் விவசாயிகள்மீது தடியடி நடத்தியது தொடர்பாக, மாவட்ட காவல் ஆணையர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் அறிக்கை தாக்கல் செய்யுமாறு தேசிய மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் கட்சி அளித்த புகாரின் பெயரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், விவசாயிகள்மீதான தடியடி தொடர்பாக கர்னல் பகுதி மக்கள் தாக்கல் செய்திருக்கும் ரிட் மனுவைப் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றம் இன்று விசாரணைக்கு ஏற்றுக் கொள்கிறது.
முன்னதாக, தடியடி நடத்தி விவசாயிகளின் மண்டையை உடைக்குமாறு கர்னல் துணை கோட்ட நீதிபதி ஆயுஷ் சின்ஹா பேசிய காணொளி சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து அவர் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
Source : Indian Express
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.